புதிய ஓய்வூதிய விதிகளால் மிகுந்த மனஉளைச்சல் : அரசு ஊழியர்கள் பிரதமருக்கு கடிதம் - ஆசிரியர் மலர்

Latest

19/07/2021

புதிய ஓய்வூதிய விதிகளால் மிகுந்த மனஉளைச்சல் : அரசு ஊழியர்கள் பிரதமருக்கு கடிதம்

 ஓய்வூதிய விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து 109 முன்னாள் அரசு ஊழியர்கள் அடங்கிய குழு, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.


அக்கடிதத்தில், சமீபத்திய திருத்தத்தினால் ஆழ்ந்த மன உளைச்சலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.



அப்படி என்ன மாற்றங்களை அரசு செய்துள்ளது? எதற்காக இந்த கடிதம் என்பதை பற்றித் தான் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.


முக்கிய தகவல்களை பகிரக் கூடாது

முக்கிய தகவல்களை பகிரக் கூடாது

உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் அமைப்புகளில் பணியாற்றிய சிவில் அதிகாரிகள் தங்கள் பணிக்காலத்திற்குப் பிறகும், துறை சார்ந்த மற்றும் துறையில் பணியாற்றும் நபர்கள் குறித்த எந்த முக்கிய தகவலையும் வெளியில் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்ற நிபந்தனைகள் உள்ளிட்ட புதிய விதிகளை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.


முன் அனுமதி பெற வேண்டும்

முன் அனுமதி பெற வேண்டும்

இதற்காக மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதிய) திருத்த விதிகள், 2021- ஐ (Public Grievances and Pensions on 31 May 2021) கொண்டு வந்தது. இதன் மூலம் முக்கியமான தகவல்களை வெளியிடுவதற்கு, அமைப்பின் தலைவரிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்று புதிய விதிகள் கூறுகின்றன. முந்தைய 2007 விதிகளில், துறைத் தலைவரிடமிருந்து அனுமதி பெற்றால் போதும் என இருந்தது குறிப்பிடத்தக்கது.


ஓய்வூதியத்தினை நிறுத்தி வைக்கலாம்

 

ஓய்வூதியத்தினை நிறுத்தி வைக்கலாம்

அரசின் இந்த புதிய விதிகள் தேவையான மாற்றங்களுக்குப் பிறகு, விரைவில் செயல்படுத்தப்படும். உரிய அனுமதி இல்லாமல் தகவலை வெளியிட மாட்டோம் என அனைத்து ஊழியர்களும் அமைப்புத் தலைவருக்கு ஒரு உறுதிமொழியைக் கொடுக்க வேண்டும். அத்தகைய தகவல்களை அவர்கள் விதிகளை மீறி வெளியிட்டால், ஊழியர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்கலாம் என்று திருத்தப்பட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளது.


பழைய விதிகள்

பழைய விதிகள்

மார்ச் 2008ல் அறிவிக்கப்பட்ட மத்திய சிவில் சர்வீசஸ் திருத்த விதிகள், 2007ன் பதுகாப்பு துறை சார்ந்த ஊழியர்கள் அனைவரும் எந்தவொரு முக்கியமான தகவலையும் வெளியிடுவதற்கு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளனர். இதை வெளிப்படுத்தப்படுவது இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாரபட்சமின்றி பாதிக்கும் என முன்னர் கூறப்பட்டது.


அனுமதி இல்லாமல் தகவல்களை வெளியிடக்கூடாது?

அனுமதி இல்லாமல் தகவல்களை வெளியிடக்கூடாது?

ஆனால் சமீபத்திய திருத்தத்தின் படி, திருத்தப்பட்ட விதிமுறை தற்போது, எந்தவொரு அரசு ஊழியரும், எந்தவொரு உளவுத்துறை அல்லது பாதுகாப்பு தொடர்பான அமைப்பிலும் பணிபுரிந்தவர், நிறுவனத்தின் தலைவரின் முன் அனுமதி இல்லாமல், ஓய்வு பெற்ற பின்னர், டொமைன் தொடர்பான மற்றும் எந்தவொரு விஷயத்தையும் வெளியிடக் கூடாது. எந்தவொரு பணியாளர்கள் மற்றும் அவரது பதவி, மற்றும் அந்த அமைப்பில் பணியாற்றுவதன் மூலம் பெறப்பட்ட நிபுணத்துவம் அல்லது திறன் பற்றிய எந்தவொரு குறிப்பு அல்லது தகவல் உட்பட அமைப்பின் எந்த தகவலையும் வெளியிடக் கூடாது.


யாருக்கெல்லாம் இந்த விதிகள்

யாருக்கெல்லாம் இந்த விதிகள்

மேலும் 2007 விதிகளில் எந்தவொரு பணியாளர்களையும் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. ஆனால் இது தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஓய்வூதிய விதிகள் உளவுத்துறை, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம், மத்திய பொருளாதார புலனாய்வு பணியகம், அமலாக்க இயக்குநரகம், விமான ஆராய்ச்சி மையம், எல்லை பாதுகாப்பு படை ஆகியவற்றிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இந்த விதிகள் பொருந்தும்.


இவர்களும் பட்டியலில் அடங்குவர்

இவர்களும் பட்டியலில் அடங்குவர்

மேலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு காவலர்கள், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம், சிறப்பு எல்லை படை, சிறப்பு பாதுகாப்பு குழு மற்றும் நிதி புலனாய்வு பிரிவு உள்ளிட்டவர்களும் இதில் அடங்குவார்கள்.


இவர்களுக்கும் பொருந்தும்

இவர்களுக்கும் பொருந்தும்

2007 மற்றும் 2021 விதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியாளர்களையும் இணைக்க திருத்தப்பட்ட சி.சி.எஸ் விதிகள் 1972 வழிவகுக்கிறது. இதன் மூலம் இந்த விதிகள் டிசம்பர் 31, 2003 அல்லது அதற்கு முன்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும்.


மிகுந்த மன உளைச்சல்

மிகுந்த மன உளைச்சல்

இப்படிபட்ட விதிகளுக்கு மத்தியில் தான், ஓய்வுபெற்ற அதிகாரிகள், முன்னாள் அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்ற அதிகாரத்துவத்தினர் தங்கள் பணி ஆண்டுகளில் அவர்கள் செய்த வேலையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி தங்கள் நினைவு குறிப்புகள் கட்டுரை எழுந்துவதும், டொமைன் அறிவினை பயன்படுத்தி நடப்பு விவரங்களை பற்றிய கருத்து கூறுவது, உலகளவில் பாராட்டப்படும் ஒரு விஷயமாகும். ஆக அரசின் இந்த புதிய விதிகளால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம் என்றும் அந்த கடித்ததில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459