ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்...முனைவர் சௌ. நாராயணராஜன் கூறும் தீர்வுகள் - ஆசிரியர் மலர்

Latest

10/07/2021

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்...முனைவர் சௌ. நாராயணராஜன் கூறும் தீர்வுகள்


மதுரை: கண்ணுக்குத் தெரியாத கடந்த இரண்டு ஆண்டுகாலமாக கொரோனா வைரஸ் உலகத்தையே முடக்கியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது மாணவர்கள்தான். பள்ளி, கல்லூரி காலத்தை சந்தோஷமாக அனுபவிக்க முடியாமல் ஆன்லைன் வகுப்புகளால் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இந்த ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் சந்திக்கும் சங்கடங்கள் என்னென்ன அந்த பிரச்சினைகளுக்கு என்னமாதிரியான தீர்வுகள் உள்ளது என்று நமது ஒன் இந்தியா தமிழ் இணைய தளத்திற்கு பகிர்ந்து கொண்டுள்ளார் பேராசிரியரும் சிவந்தி ஆதித்தனார் கல்வி குழுமத்தின் செயலாளருமான முனைவர் சௌ. நாராயணராஜன் என்கிற நெல்லை கவிநேசன்.ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற கேள்வியை நாம் முன் வைத்தோம். நம்முடைய பல கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார் முனைவர் நெல்லை கவிநேசன்.கொரோனா காலத்தில் மாறிப்போன கல்வி முறையால் மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரி வாழ்க்கைமுறை மறந்து போகுமா? ஆன்லைன் கல்விமுறை மாணவர்களுக்கு சாதகமாக பாதகமா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள முனைவர் நெல்லை கவிநேசன், பெற்றோர்கள் மிகப்பெரிய சிரமமாக இருந்தாலும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் ஒருவரை ஒருவர் இணைக்கும் பாலமாக ஆன்லைன் வகுப்புகள் உள்ளன. மாணவர்களுக்கு சாதகமாக இருந்தாலும் பல பிரச்சினைகள் உள்ளன என்று தெரிவித்தார். இனி 2 டேர்ம் தேர்வு.. சிபிஎஸ்இ 10 &; 12ம் வகுப்பு கல்வி ஆண்டு 2 பருவங்களாக பிரிப்பு.. சிபிஎஸ்இ முடிவுமாணவர்களுக்கு பாதிப்புகொரோனா வைரஸ் இதழில் வெளியான கட்டுரையில் கோவிட் 19 குறித்து ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது. ஆன் லைன் வகுப்புகளால் இந்திய மாணவர்களுக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது பற்றி வெளியாகியுள்ளது. 292 பேரை சந்தித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டு முடிவுகள் புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.என்னென்ன பிரச்சினைகள்30 சதவிகித மாணவர்கள் இந்த ஆன்லைன் கல்வி முறையால் திருப்தியற்ற நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களில் பலர் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி விட்டனர். மன உளைச்சல்களுக்கு மாணவர்கள் ஆளாகியுள்ளனர். தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் இருப்பதால் கண் பிரச்சினை வந்து விட்டது.ஆசிரியர் நடத்தும் பாடங்கள்கிராமப்புற மாணவர்களுக்கு டவர் பிரச்சினை இருக்கிறது. லேப்டாப், செல்போன் இல்லாத பிரச்சினை உள்ளது. சமூக, பொருளாதார, தொழில்நுட்ப ரீதியான, மன ரீதியான பிரச்சினைகளை உருவாக்குகிறது.இதில் ஒரே நன்மை என்னவென்றால் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க முடியலையே என்ற ஏக்கத்தை போக்குகிறது. முக கவசம் அணிந்து கொண்டு வலம் இந்த கால கட்டத்தில் ஆசிரியர் நேரடியாக வீட்டிற்கே வந்து பாடம் நடத்துவது போன்ற உணர்வை தருவதால் ஆன்லைன் வகுப்புகளும் சில நன்மைகளை தரக்கூடியதாகவே இருக்கிறது.தேர்வு எழுதாமல் பாஸ்மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமலேயே தேர்வுகள் எழுதாமலேயே பாஸ் ஆகி விட்டனர். இது உயர்கல்வித்துறையில் பாதிப்புகளை ஏற்படுத்துமா என்ற கேள்வியை முன்வைத்தோம். அதற்கு பதில் அளித்துள்ள முனைவர் நெல்லை கவிநேசன், பள்ளி காலத்தில் தேர்வுகள் எழுதாமல் பலரும் பாஸ் ஆகி விட்டனர். இதனால் உயர்கல்வித்துறையில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார். அதற்கான விளக்கத்தையும் விரிவாகத் தெரிவித்துள்ளார்.நினைவாற்றல் திறன்இன்றைக்கு உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் கூட வீட்டில் வைத்தே தேர்வு எழுதுகின்றனர். ஆன்லைனில் மாணவர்கள் தேர்வுகளை எப்படி எழுதுகிறார்கள் என்பது பலராலும் கணிக்க முடிவதில்லை. ஒருசிலர் பார்க்காமல் எழுதினாலும் பலர் பார்த்து எழுதுவதாகவே தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு நினைவாற்றல் கண்டிப்பாக வேண்டும். மனப்பாட சக்தி இருந்தால்தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். இந்த கல்வி முறை நினைவாற்றலை வளர்க்க உதவுகிறது. தற்போது உள்ள ஆன்லைன் கல்வி முறை தேர்வுகள் நினைவாற்றலை மழுங்கடிக்கும் வகையில் உள்ளது. அரசு தேர்வுகளில் நினைவாற்றல் திறன் அதிகம் உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்.எதிர்மறை எண்ணங்கள்தற்போது உள்ள கல்வி முறை மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. காலையில் தொடங்கும் வகுப்புகளால் தனிமையில் அமரும் மாணவர்களுக்கு பாதிப்பு வருகிறது. நண்பர்களுடன் பேச பழக முடியாத நிலையால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்பு வருகிறது. எதிர்மறை எண்ணங்கள், நம்பிக்கையற்ற தன்மையை உருவாக்குகிறது.ஆன்லைன் பரிதாபங்கள்மாணவர்களுக்கு களைப்பும் சலிப்பும் வாழ்க்கை மேலேயே வெறுப்பும் ஏற்படுகிறது. ஆன்லைன் பரிதாபங்களால் இன்றைய குழந்தைகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ஏழை எளிய மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இளமையிலேயே முதுகு வலி ஏற்படுகிறது. ஆசிரியர்கள் அருகில் இல்லாத சூழ்நிலையில் மாணவர்களால் நேரடியாக பேசிக்கொள்ள முடியவில்லை. பல மாணவர்கள் தலைவலி பிரச்சினையை சந்திக்கின்றனர்.மாற்றங்களை ஏற்றுக்கொள்வோம்கொரோனா காலத்தில் கை கொடுத்தது ஆன்லைன் வகுப்புகள்தான். தனிமையில் இருந்தவர்களை இணைத்தது ஆன்லைன் வகுப்புகள்தான். ஆசிரியர் மாணவர்களிடையே ஒரு பாலத்தை உருவாக்கினாலும் சில பிரச்சினைகளும் உள்ளன. மாறி வரும் சூழலுக்கு ஏற்ப அதை ஏற்றுக்கொண்டு நாம் தயாராக வேண்டும்.ஆன்லைன் வகுப்புகள் நடந்தாலும் தொடர்ந்து மொபைல் போனில் எதையாவது வீடியோக்களைப் பார்த்துக்கொண்டே இருக்காமல் அடிக்கடி இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டே இருப்பதை விட இடை இடையே சின்னச் சின்ன உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். கொரோனா உடன் நாம் இன்றைக்கு வாழ பழகிவிட்டோம். மாற்றங்கள் ஒன்றுதான் உலகத்தில் மாறாத ஒன்று மாற்றங்களை சந்திக்கிற அளவுக்கு மன தைரியத்தை வளர்த்துக்கொள்வது அவசியமான ஒன்று என்றும் கூறியுள்ளார் முனைவர் சௌ. நாராயணராஜன் என்கிற நெல்லை கவிநேசன். உயர்கல்வித்துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி முனைவர் நெல்லை கவிநேசன் கூறிய விளக்கத்தை மற்றொரு பதிவில் பார்க்கலாம்..,. . .,

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459