இந்த வார ராசி பலன் : ஜூலை 02, 2021 முதல் ஜூலை 08,2021 வரை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

இந்த வார ராசி பலன் : ஜூலை 02, 2021 முதல் ஜூலை 08,2021 வரைசென்னை: ஜூலை மாதத்தின் முதல் வாரம் ரிஷப ராசியில் ராகு, புதன், மிதுன ராசியில் சூரியன், கடகத்தில் சுக்கிரன், செவ்வாய், விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி, கும்ப ராசியில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் இந்த வாரம் மீனம், மேஷம், ரிஷபம், மிதுன ராசிகளில் சஞ்சரிக்கிறார். ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணிகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 2,2021 முதல் ஜூலை 8,2021 வரை பலன்கள் எப்படி இருக்கும், பரிகாரங்களைப் பார்க்கலாம்.கிரகங்களின் சஞ்சாரம்சூரியன் - மிதுன ராசிசந்திரன் - மீனம், மேஷம், ரிஷபம்செவ்வாய் - கடகம்புதன் - ரிஷபம் ராசியில் இருந்து 7ஆம் தேதி மிதுன ராசிக்கு மாறுகிறார்குரு - கும்ப ராசிசுக்கிரன் - கடகம்சனி - மகர ராசிராகு - ரிஷப ராசிகேது - விருச்சிக ராசிமேஷம்செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, திறமையும் தன்னம்பிக்கையும் அதிகம் உங்களுக்கு இந்த வாரம் நவகிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் ராகு, புதன், மூன்றாம் வீட்டில் சூரியன்,நான்காம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன், எட்டாம் வீட்டில் கேது,பத்தாம் வீட்டில் சனி, லாப வீட்டில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. சூரியன் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் அரசாங்க ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு வேலையில் திடீர் மாற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். பிருகு மங்கல யோகம் கை கூடி வந்துள்ளதால் தொழில் வியாபாரத்தில் திடீர் லாபம் தரும். வீடு மனை வாங்கும் யோகம் வரும், புதிதாக வண்டி வாகனம் வாங்குவீர்கள். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும் பேச்சில் இனிமை கூடும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் வரும். புதன் ராகு சேர்க்கையால் வார்த்தைகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் லாபம் அதிகரிக்கும், எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லுங்கள். தேவை அறிந்து பேசுங்கள். அநாவசிய பேச்சுக்களை தவிர்த்து விடுவது நல்லது.ரிஷபம்சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, உங்களுடைய தெளிவான பேச்சு உங்களுடைய மதிப்பு மரியாதையை அதிகரிக்கும். இந்த வாரம் உங்கள் ராசியில் ராகு,புதன், இரண்டாம் வீட்டில் சூரியன், மூன்றாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன், ஏழாம் வீட்டில் கேது, ஒன்பதாம் வீட்டில் சனி, பத்தாம் வீட்டில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. வேலை செய்யும் இடத்தில் சம்பளம் அதிகரிக்கும், பேச்சில் அதிகாரத் தொனி உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். இளைய சகோதர சகோதரிகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வார இறுதியில் புதன் இரண்டாம் வீட்டிற்கு மாறுவதால் பேச்சில் தெளிவு பிறக்கும். மதிப்பு மரியாதை கூடும். செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சுக்கிரன் உடன் பயணம் செய்வதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். ஒன்பதாம் வீட்டில் உள்ள சனி பகவானின் பார்வை மூன்றாம் வீட்டில் உள்ள சுக்கிரன், செவ்வாய் மீது விழுவதால் இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். நட்பு விசயத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியான மாற்றங்கள் ஏற்படும் முன்னேற்றம் வரும். கடன் பிரச்சினை நீங்கும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரிக்கிறார். செய்யும் செயல்கள் யாவும் சிறப்படையும், தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும் கவலைகள் நீங்கி மனமகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் வருமானம் வரும், அதே போல சுப செலவுகளும் வரும் மனதிற்கு சந்தோஷத்தை தரக்கூடிய வாரமாக அமைந்துள்ளது.மிதுனம்புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, இந்த வாரம் ராசிக்குள் சூரியன்,இரண்டாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன் ஆறாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் சனி, ஒன்பதாம் வீட்டில் குரு, விரைய ஸ்தானத்தில் ராகு, புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. வார இறுதியில் புதன் உங்கள் ராசிக்கு வந்து ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் வேலையில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும், அலுவலகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருக்கிறார் பேச்சில் சூட்டை குறைத்து கோபத்தை கட்டுப்படுத்தவும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விரைய ஸ்தானத்தில் உள்ள புதனால் புத்திக் கூர்மை அதிகரிக்கும். குருவின் பார்வை குதூகலத்தைக் கொடுக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்த்து சிக்கனமாக இருங்கள். காதல் விசயங்கள் கை கூடி வரும் என்றாலும் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் பயணங்களைத் தவிர்க்கவும். பெண்களுக்கு பொன் நகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். அஷ்டமத்து சனியால் தடைகள் வரும் தடைகளை தாண்டி முன்னேற குரு உதவி செய்வார். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப்பதால் ஆன்மீக பயணம் மன அமைதியை ஏற்படுத்தும் குல தெய்வ அருள் கிடைக்க வியாழக்கிழமை குல தெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள்.கடகம்சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, இந்த வாரம் ராசியில் செவ்வாய், சுக்கிரன், லாப ஸ்தானத்தில் ராகு,புதன் விரைய ஸ்தானத்தில் சூரியன், ஐந்தாம் வீட்டில் கேது, ஏழாம் வீட்டில் சனி, எட்டாம் வீட்டில் குரு, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. வார இறுதியில் புதன் 12ஆம் வீட்டிற்கு வருகிறார். அப்பாவுக்காக செய்யும் செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் ராசியில் அமர்ந்திருப்பதால் பேச்சில் சூடு அதிகரிக்கும் காரத்தை கொஞ்சம் குறைக்கவும். குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் சஞ்சரிப்பதால் பணம் விசயத்தில் கவனம் தேவை. குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் சஞ்சரிப்பதால் பணம் விசயத்தில் கவனம் தேவை.குரு பார்வையால் தொழில் முதலீடுகளில் லாபம் இரட்டிப்பாகும். வருமானத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் திடீர் இட மாற்றங்கள் ஏற்படும். புதிய திட்டங்கள் வெற்றிகரமாக முடியும். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் வக்ரம் பெற்று சஞ்சரிப்பதால் வியாபார வாடிக்கையாளர்களினால் நன்மை உண்டாகும், நண்பர்களுடன் நல்லுறவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவது தொடர்பாக இந்த வாரம் முயற்சி செய்யலாம். திடீர் யோகங்கள் வரக்கூடிய வாரமாக அமைந்துள்ளது.சிம்மம்சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் கேது, ஆறாம் வீட்டில் சனி, ஏழாம் வீட்டில் குரு, பத்தாம் வீட்டில் ராகு,புதன், லாப ஸ்தானத்தில் சூரியன், விரைய ஸ்தானத்தில் செவ்வாய்,சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் பதவி உயர்வு தேடி வரும் வருமானம் அதிகரிக்கும் சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளது. மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வார இறுதியில் சந்திராஷ்டமம் வருவதால் கவனம் தேவை. செவ்வாய் உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வீடு நிலம் போன்றவற்றில் முதலீடுகள் செய்வது லாபத்தை தரும். தொழில் வியாபாரத்தில் திடீர் லாபம் வரும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தமாக செய்யும் தொழில் சிறப்படையும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். பண வருமானம் வரும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும் தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபரான குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும். நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும் காலம் வந்து விட்டது. சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் பேச்சில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் கவனமும் நிதானமும் தேவை. சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமில்லை. ஜூலை 03 அதிகாலை 06.13 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் தேவை. முதலீடுகளைத் தவிர்க்கவும். வண்டி வாகனங்களில் நிதானமாக செல்லவும். உணவு விசயத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. பெற்றோர்கள், சகோதர சகோதரிகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் நிதானம் தேவை.கன்னிபுதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் கேது, ஐந்தாம் வீட்டில் சனி ஆறாம் வீட்டில் குரு, ஒன்பதாம் வீட்டில் ராகு,புதன், பத்தாம் வீட்டில் சூரியன், லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கிறார். வார இறுதியில் உங்கள் ராசி நாதன் புதன் பத்தாம் வீட்டிற்கு வருகிறார். செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். படித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு அரசு வேலையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் லாப ஸ்தானத்தில் இருக்கிறார் வீட்டு வாடகை மூலம் பண வருமானம் அதிகரிக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். தெளிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. இரட்டிப்பு லாபம் கை கூடி வரும். இந்த வாரம் பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் தேடி வரும். குரு பகவான் ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். இந்த வாரம் உங்களின் முன்னேற்றத்திற்கு ஆலோசனையும் உதவியும் கிடைக்கும். தீர்க்கப்படாத பிரச்சினைகள் நீங்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பிள்ளைகளால் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். சனிபகவான் யோகத்தை தருவார். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் கிடைக்கும். மன குழப்பம் நீங்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். இந்த வாரம் உங்கள் ராசிக்கு ஜூலை 03ஆம் தேதி காலை 06.13 முதல் ஜூலை 05 ஆம் தேதி இரவு 06.59 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் பேச்சில் நிதானமும் செயல்களில் கவனமும் தேவை.துலாம்சுக்கிர பகவானை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ராசிக்கு இரண்டாம் வீட்டில் கேது, நான்காம் வீட்டில் சனி, ஐந்தாம் வீட்டில் குரு, எட்டாம் வீட்டில் ராகு, புதன், ஒன்பதாம் வீட்டில் சூரியன், பத்தாம் வீட்டில் செவ்வாய்,சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. அஷ்டம ஸ்தானத்தில் உள்ள புதன் வார இறுதியில் ஒன்பதாம் வீட்டிற்கு வருகிறார். திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். சூரியன் ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப்பதால் வேலை விசயமாக வெளியூர், வெளிநாடு பயணம் செய்ய வேண்டியிருக்கும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் விருத்தியடையும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். தடைகளை தாண்டி சாதிப்பீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பணவருமானம் கூடும். வங்கியில் சேமிப்பு அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினை தீரும். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். சனிபகவான் நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். வண்டி வாகனம் எதுவும் வாங்க முயற்சி செய்ய வேண்டாம் ஒத்திப்போடவும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு உயரும். சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருந்தாலும் வார இறுதியில் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்திற்கு வருகிறார். ஜூலை 05 ஆம் தேதி மாலை 06.59 மணி முதல் ஜூலை 08 காலை 07.41 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.விருச்சிகம்செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசிக்குள் கேது, மூன்றாம் வீட்டில் சனி, நான்காம் வீட்டில் குரு, ஏழாம் வீட்டில் ராகு, புதன், எட்டாம் வீட்டில் சூரியன், ஒன்பதாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. வார இறுதியில் புதன் சூரியன் உடன் இணைகிறார். எட்டாமிடத்தில் சூரியன்,புதன் சஞ்சரிப்பதால் மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்றாலும் கவனமும் நிதானமும் தேவை. பேச்சில் நிதானம் அவசியம். அவசரப்பட்டு வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போது நிதானம் தேவை விட்டுக்கொடுத்து செல்லவும். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். கூடுதல் விழிப்புணர்வு தேவை. திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேச வேண்டாம். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் சிறப்படையும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். இந்த வாரம் அமைதியும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் தேவைப்படும். ஜூலை 08ஆம் தேதி காலை 07.41 மணி முதல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டவேண்டும். பயணங்களில் அதிக கவனமும் விழிப்புணர்வும் அவசியம்.தனுசுகுரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் கேது,இரண்டாம் வீட்டில் சனி, மூன்றாம் வீட்டில் குரு, ஆறாம் வீட்டில் ராகு,புதன், ஏழாம் வீட்டில் சூரியன், எட்டாம் வீட்டில் செவ்வாய்,சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. வார இறுதியில் புதன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஏழாமிடத்திற்கு வருகிறார். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளது. இந்த வாரம் திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். பண பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை விசயமாக அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். இருக்கிற வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள், வேலையை விட்டு விட்டு புதிய வேலைக்கு எதுவும் முயற்சி செய்ய வேண்டாம். செவ்வாய் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார் வண்டி வாகனங்களில் செல்லும் போது வேகத்தை குறைத்து மெதுவாக செல்லவும். உங்களுடைய புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்க பொறுமையும் நிதானமும் தேவை. ஏழரை சனி காலமாக இருப்பதால் சுப காரியங்கள் புதிய முயற்சிகள் இழுபறியாகவே நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனமும் அக்கறையும் தேவைப்படும். நம்பிக்கையுடன் முயற்சி செய்பவர்களுக்கு நினைத்த காரியம் நடைபெற பொறுமை தேவை வெற்றிகள் கை கூடி வரும். இந்த வாரம் பெரிய அளவில் திட்டங்கள் எதுவும் வைத்துக்கொள்ள வேண்டாம்.மகரம்சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்கள் ராசியில் சனி, இரண்டாம் வீட்டில் குரு ஐந்தாம் வீட்டில் ராகு,புதன், ஆறாம் வீட்டில் சூரியன்,ஏழாம் வீட்டில் செவ்வாய்,சுக்கிரன், லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் கவனம் தேவை. புதன் வார இறுதியில் ஆறாம் வீட்டிற்கு வருகிறார். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளது. உறவினர்கள் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். பண வருமானம் வந்தாலும் சுப காரிய செலவுகள் தேடி வரும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் சிக்கல்கள் நீங்கும். வாழ்க்கைத்துணையால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேகமான செயல்பாடுகளை குறைத்துக்கொள்ளுங்கள். எந்த செயலையும் செய்யும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யவது நல்லது. சனி உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும் உடலில் அசதி கூடும். பெண்களின் உடல் ஆரோக்கியம் சிறப்படையும். உற்சாகமான வாரமாக அமைந்துள்ளது.கும்பம்சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே இந்த வாரம் உங்கள் ராசியில் குரு, ராசிக்கு நான்காம் வீட்டில் ராகு,புதன், ஐந்தாம் வீட்டில் சூரியன்,ஆறாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன்,பத்தாம் வீட்டில் கேது விரைய ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு சாதகமாக உள்ளது மனதில் தெளிவு பிறக்கும். இந்த வாரம் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய வேலை விசயமாக முயற்சி செய்யலாம். ஆறாம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை இருப்பதால் எதிர்பாலினத்தவர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை. காதலிப்பவர்கள் பாதுகாப்பாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டியிருக்கும் காலமிது. வார இறுதியில் புதன் ஐந்தாம் வீட்டில் உள்ள சூரியனுடன் இணைகிறார். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல்கள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சின்னச் சின்ன மன சங்கடங்கள் வரலாம் வெளிப்படையாக பேசி பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்யுங்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் நிதானமும் தேவை. மாணவர்கள் புதிய கல்வியை தேர்வு செய்யும் முன்பாக பெற்றோர், ஆசிரியர்களை ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து முடிவு செய்யவும். பெண்களுக்கு குடும்பத்தில் சுப விரைய செலவுகள் வரும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசும் போது யோசித்து பேசவும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும் வாரமாக அமைந்துள்ளது.மீனம்குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராகு,புதன், நான்காம் வீட்டில் சூரியன், ஐந்தாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் கேது, லாப ஸ்தானத்தில் சனி, விரைய ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சூரியன் சுக ஸ்தானத்தில் பயணம் செய்வதால் புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளது. மன சஞ்சலங்கள் நீங்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார் பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பும் நெருக்கவும் கூடும். சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வீண் செலவுகள் அதிகரிக்கும். திடீர் திருப்பங்களும் எதிர்பாராத பண வரவும் வரும். வேலையில் உங்களுடைய பொறுப்பை தட்டிக்கழிக்க வேண்டாம் கவனத்தோடும் விழிப்புணர்வோடும் இருப்பதும் அவசியம். உறவினர்களிடத்தில் சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம் கோபத்தை குறைத்து நிதானமாக பேசவும். குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்லவும்.

No comments:

Post a Comment