மக்களே அச்சம் வேண்டாம்..டெல்டா பிளஸ் வைரஸ் பாதித்த பெண் குணமடைந்தார்.. கான்ஃபிடன்ஸ் கொடுக்கும் மா.சு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மக்களே அச்சம் வேண்டாம்..டெல்டா பிளஸ் வைரஸ் பாதித்த பெண் குணமடைந்தார்.. கான்ஃபிடன்ஸ் கொடுக்கும் மா.சு

 சென்னை: தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பெண் குணமடைந்து விட்டதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டிபடைத்து வருகிறதுகொரோனா தடுப்பூசி 'சாதனை' சட்டென மறுநாளே சரிந்தது ஏன்? பாஜக ஆளும் 7 மாநிலங்களின் மீது சந்தேகம்? அதுவும் கடந்த 3 மாதங்களாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் போட்டு பாடாய் படுத்தியது.டெல்டா பிளஸ் வைரஸ்இந்த நிலையில் தற்போது டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா வகை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவி புதிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு மேலாக டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டது.தமிழ்நாட்டிலும் பாதிப்புதமிழ்நாட்டிலும் ஒரு பெண்ணுக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்னண் நேற்று தெரிவித்தார். சுமார் ஆயிரம் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் டெல்டா பிளஸ் வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ராதாகிருஷ்ணன் கூறி இருந்தார்.பெண் குணமடைந்தார்இந்த நிலையில் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த பெண் குணமடைந்து விட்டதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அந்த செவிலியர் சிகிச்சை பிறகு நலம் பெற்று பணிக்கு திரும்பி உள்ளார். அந்த செவிலியருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு பரிசோதனையில் பாதிப்பு ஏதும் இல்லை.அச்சம் தேவையில்லைஎனவே டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. இந்த வைரஸ் தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. வெளிநாட்டு விமான சேவைகள் தொடங்கினால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.: ,

No comments:

Post a Comment