ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?- முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

19/06/2021

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?- முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை

 

202106190417472424_Tamil_News_Tamil-News-Chief-Minister-MK-Stalin-today-consulting-with_MEDVPF

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மாதம் முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21-ம் தேதி வரை அமலில் உள்ளது.


தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. 


இந்நிலையில், ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். 


ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து இன்று காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

No comments:

Post a Comment