நெல்லை அரசுப்பள்ளியில் உயரும் மாணவர் சேர்க்கை.. ஆன்லைன் கல்வியில் அசத்தும் ஆசிரியர்கள் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நெல்லை அரசுப்பள்ளியில் உயரும் மாணவர் சேர்க்கை.. ஆன்லைன் கல்வியில் அசத்தும் ஆசிரியர்கள்

 


திறமையான ஆசிரியர்கள், தேவையான அடிப்படை கட்டமைப்புகள், கட்டணமில்லாக் கல்வி என எல்லா வசதிகளையும் கொண்டிருந்தாலும் அரசுப்பள்ளிகளில் குறைந்து கொண்டே வந்த மாணவர் சேர்க்கை சமீபகாலங்களில் மீண்டும் ஏறுமுகமாகி இருக்கிறது. கொரோனா பரவலால் கல்வி ஆன்லைன் மயமாகி விட தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.திருநெல்வேலி ஜவஹர் அரசுப்பள்ளியில் கடந்த 2012 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு தொடங்கப்பட்டது. அப்போது முதல் அப்பள்ளி 10 ஆம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சியைக் கொடுத்து வருகிறது. அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஏழை மாணவர்கள் என்பதால் கொரோனா காலத்தில் அவர்களின் அறிவுத்தேவையை மட்டுமின்றி அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றி இருக்கின்றனர் ஜவஹர் பள்ளி ஆசிரியர்கள்.மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலமாகக் கிடைக்கும் சலுகைகள் மற்றும் கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்குத் தேவையான அத்தனை உதவிகளையும் இப்பள்ளி வழங்குவதாகக் கூறுகிறார் பள்ளியின் தலைமை ஆசிரியை மாலா.தற்போது நடப்பு கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவரவருக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள நாளில் வந்து மாணவர்கள் புத்தகங்களைப் பெற்றுச் செல்கின்றனர். ஆன்லைனில் கல்வி பயின்று வந்தாலும் விரைவில் வகுப்புக்கு வந்து கல்வி கற்க வேண்டுமென்பதே இந்த மாணவர்களின் விருப்பமாக இருக்கிறது.

No comments:

Post a Comment