அரசு பள்ளிகளில் மாணவர்களை 8ம் வகுப்பு வரை சேர்க்க டிசி தேவையில்லை: தனியார் கொடுக்காவிட்டாலும் ஆதார் போதும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

21/06/2021

அரசு பள்ளிகளில் மாணவர்களை 8ம் வகுப்பு வரை சேர்க்க டிசி தேவையில்லை: தனியார் கொடுக்காவிட்டாலும் ஆதார் போதும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

 சேர்க்கையின் போது 8ம் வகுப்பு வரை மாற்றுச் சான்று இல்லாமல் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கலாம் என்று பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 1 வகுப்புகளில் கடந்த 14ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை  நடக்கிறது. கொராேனா தொற்றின் காரணமாக பொதுமக்களிடம் ஒரு வித பாதுகாப்பு உணர்வு இருந்து வருகிறது. அதனால், தனியார் பள்ளிகளில் படித்து வரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு பொதுமக்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர். மாற்றுச் சான்று வழங்க தனியார் பள்ளிகள் மறுப்பு தெரிவித்து, கடந்த ஆ ண்டுக்கான கல்விக் கட்டணம் செலுத்துவோருக்கு மட்டுமே மாற்றுச் சான்று வழங்கி வருகின்றன.


இந்த பிரச்னையால், மாற்றுச் சான்றை பெறுவதில் பெற்றோர் சிரமப்படுகின்றனர். இதற்கிடையே, தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களை மாற்றுச் சான்று இல்லாமல் அரசுப் பள்ளிகளில் சேர்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டை தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் கூறும்போது, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் , தங்கள் பள்ளிகளில் இறுதி வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கும் அந்த பள்ளிகளில் இருந்து வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்களுக்கும் மாற்றுச் சான்று கொடுப்பதற்கான அனைத்து விவரங்களையும் கல்வித் தகவல் மேலாண்மை இணையத்தில் அந்த மாணவர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். அதிலிருந்து மாணவர்களின் மாற்றுச் சான்றை கேட்கும் போது பதிவிறக்கம் செய்து கொடுக்க வேண்டும்.

அனைவரும் கட்டாய கல்வி சட்டத்தின்படி அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி  வழங்கப்படுவதால், தனியார் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மாற்றுச் சான்று இல்லாமலேயே அரசுப் பள்ளிகளில் அவர்கள் படிக்க வேண்டிய வகுப்பில் சேர்ந்து கொள்ள முடியும். மாணவர் சேர்க்கையின்போது அவர்கள் தங்கள் ஆதார் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும்.கல்வி மேலாண்மை தகவல் முகமையில் அந்த எண்ணை பயன்படுத்தி  பெற்றுக் கொள்ள  முடியும். தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேறும் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்துவிட்டு, அவர்களின் மாற்றுச் சான்றிதழைஅனுப்ப அந்த பள்ளிக்கு கல்வித் தகவல் மேலாண்மை முறைமையின் மூலம் வேண்டுகோள் விடுக்கலாம். எனவே அரசுப் பள்ளியில் 8ம்  வகுப்பு வரையில் மாணவர்களை சேர்க்க மாற்றுச் சான்று ஏதும் தேவையில்லை. இவ்வாறு ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேறும்  மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்துவிட்டு, அவர்களின் மாற்றுச்  சான்றிதழை அனுப்ப அந்த       பள்ளிக்கு கல்வித் தகவல் மேலாண்மை முறைமையின் மூலம் வேண்டுகோள் விடுக்கலாம். எனவே அரசுப் பள்ளியில் 8ம்  வகுப்பு வரையில்  மாணவர்களை சேர்க்க மாற்றுச் சான்று ஏதும் தேவையில்லை

IMG-20210621-WA0002

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459