குரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

குரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்

 
சென்னை: சுப கிரகமான குரு பகவான் வக்ரமடையும் கால கட்டத்தில் தனுசு, மகரம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும். குரு பகவான் ஆனி மாதம் 06ஆம் தேதி அதாவது ஜூன் 20ஆம் தேதி முதல் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். 120 நாட்கள் வக்ரநிலையில் சஞ்சரிக்கும் குரு பகவானால் தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்குக் கிடைக்கப் போகும் பலன்களையும் பாதிப்புகள் குறைய என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.கிரகங்கள் ஒரு சில நேரங்களில் அதிசாரமாகவும், வக்ரமாகவும் பயணிப்பதுண்டு. இப்போது கும்ப ராசியில் அதிசாரமாக பயணிக்கும் குரு பகவான் ஜூன் 20ஆம் தேதி வக்ர சஞ்சாரத்தை தொடங்குகிறார். செப்டம்பர் 14ஆம் ஆம் தேதியன்று மகர ராசிக்கு குரு வந்துவிடுகிறார். அக்டோபர் மாதம் வரைக்கும் வக்ரம் பெற்ற சனியோடு இணைந்து மகர ராசியில் சஞ்சரிப்பார் குரு பகவான்.நில அபகரிப்பில் ராமர் கோவில் டிரஸ்ட் சம்பத் ராய்- அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மீது பாய்ந்த வழக்கு ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் கிரகங்களின் பக்கத்தில் (வ) என குறிப்பிட்டிருக்கும். அந்த கிரகங்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும் போது பிறந்திருப்பார்கள். வக்ர சஞ்சார காலங்களில் குரு பகவான் தான் சஞ்சரிக்கும் ராசியின் பலனைக் கொடுக்காமல், அதற்கு அடுத்த ராசியின் பலன்களையே கொடுக்கும். அக்டோபர் 18ஆம் தேதி குருவின் வக்ரகாலம் முடிவுக்கு வருகிறது. குரு பார்க்க கோடி தோஷம் நீங்கும் என்று சொல்வார்கள். குரு பகவான் வக்ர சஞ்சாரத்தினால் தனுசு மற்றும் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.சுப காரியம்குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்கிறார். எதிர்பார்த்த செய்திகள் வீடு தேடி வரும். இளைய சகோதர சகோதரிகளால் நன்மை ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வீடு தேடி வரும். நிதி நெருக்கடிகள் நீங்கும். இந்த காலத்தில் திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். காதலிப்பவர்களுக்கு நல்ல காலகட்டம் குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் திருமணம் கை கூடி வரும். சுப காரியங்கள் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும்.வருமானம் அதிகரிப்புசிறு தொழில் செய்பவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும். பங்குச்சந்தை முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை தரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குரு உங்கள் வேலை தொழில் ஸ்தானத்தை பார்வையிடுகிறார். கடந்த சில மாதங்களில் வேலையை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் தேடி வரும்.சந்தோஷம் கூடும்தொழில் தொடங்க கடன் முயற்சி செய்பவர்களுக்கு கடன் கிடைக்கும். வயிறு தொடர்பான பிரச்சினை வரும் என்பதால் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு இது நல்ல காலகட்டமாக உள்ளது. குழந்தைகளால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்படும். முயற்சிக்கு ஏற்ற பலனும் வெற்றியும் கிடைக்கும். இந்த குரு வக்ர பெயர்ச்சி காலத்தில் குரு பகவானை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்கி வழிபட நன்மைகள் நடைபெறும்.பண வருமானம் அதிகரிக்கும்சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே. உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப வாக்கு ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்கிறார். கையில வாங்கினே பையில போடலை காசு போன இடம் தெரியலை என்று கடந்த காலங்களில் ஒரு வித விரக்தி மனநிலையில் இருந்திருப்பீர்கள். இனி உங்களுடைய சம்பாத்தியம் கையில் தங்கும். வீண் விரைய செலவுகள் கட்டுப்படும். வங்கியில் பணம் சேமிப்பீர்கள்.மறைமுக வருமானம்குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி குதூகலம் உண்டாகும். கணவன் மனைவி இடையே இருந்த சிக்கல்கள் நீங்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் தேடி வரும். நெருங்கிய உறவினர்களுடன் சில பிரிவுகள் வரலாம். காதல் கை கூடி வரும். திருமணம் கை கூடி வரும். மறைமுக வருமானம் வரும் பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும். வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள்.செல்வாக்கு கூடும்குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தை பார்வையிடுவதால் ஆயுள் கண்டங்கள் நீங்கும். வாழ்க்கைத்துணை வழியில் வருமானம் வரும். வேலையில் முன்னேற்றம் உண்டு. அவசரப்பட்டு வேலையை விட்டு விட்டு அவஸ்தைப்பட வேண்டாம். புகழ், செல்வம், செல்வாக்கு பாதுகாக்கப்படும். அரசாங்கத்தினால் செல்வம் செல்வாக்கு ஏற்படும். குழந்தைகளால் நன்மை ஏற்படும். இந்த குரு வக்ர பெயர்ச்சி காலத்தில் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இந்த கால கட்டத்தில் வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. தேவையில்லாத விசயங்களில் தலையிட வேண்டாம். பணம் யாருக்கும் கடன் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

No comments:

Post a Comment