மாணவர்கள் நலனே முக்கியம்.. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து - பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

01/06/2021

மாணவர்கள் நலனே முக்கியம்.. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து - பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு

டெல்லி: கொரோனா சூழலால் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக வகுப்புகள் சரியாக நடைபெறவில்லை. மிக தாமதமாக நம்பவரில் தான் கடந்த ஆண்டு 12ம் வகுப்புகளுக்கான பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டன.ஆனால் துரதிஷ்டவசமாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மார்ச் மாதத்தில் இருந்து மீண்டும் வேகமெடுத்தது. கடந்த 3 மாதமாக பாதிப்பு கடுமையாக உள்ளது. உயிரிழப்பும் முதல் அலையைவிட மிகமிக அதிகமாக உள்ளது.பெற்றோர் கோரிக்கைஎல்லா மாநிலங்ளும் கொரோனா பரவலை தடுக்க கடுமையாக போராடி வருகின்றன. இந்த சூழலில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தன. கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த ஆண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றுபல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைள் எழுந்தன.மோடி அறிவிப்புஇந்நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா சூழலால் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.மாணவர்கள் நலன்இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில். 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்த முடிவு மாணவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ளது: நமது மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது, இந்த விஷயத்தில் எந்த சமரசமும் இருக்காது.பிரதமர் அறிவிப்புமாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உள்ள பதற்றம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்: இத்தகைய மன அழுத்த சூழ்நிலையில் மாணவர்கள் பரீட்சைக்கு வருமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. அனைவரும் மாணவர்களின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார். ‘விரைவில் வரும்மதிப்பெண் எப்படி? கொரோனா சூழலால் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், மதிப்பெண் எப்படி அளிக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. அது குறித்த அளவுகோல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.-- 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459