தொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? அன்பில் மகேஷ் விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

14/06/2021

தொடங்கியது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? அன்பில் மகேஷ் விளக்கம்


சென்னை: தமிழ்நாட்டில் எப்போது பள்ளிகளை திறப்பது என்பது குறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், 12ம் வகுப்பு வரை அனைத்து விதமான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்பட்டுள்ளனர்.இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுப் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி திறப்பு எப்போது என்று தெரியாத நிலை உள்ளது.பிளஸ் 1 மாணவர்கள்அதேநேரம், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையைத் துரிதமாக முடித்து, பாடங்களை இன்டெர்நெட் பயன்படுத்தி நடத்தப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதல் கட்டமாக பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை ஜூன் 14ம் தேதியான இன்று தொடங்கியுள்ளது.மாணவர் சேர்க்கை நடைமுறையை நேரில் ஆய்வு செய்தார், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.தனி மனித இடைவெளிஅதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கோவை உட்பட ஊரடங்கில் அதிக தளர்வுகள் இல்லாத 11 மாவட்டங்களில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை இன்று தொடங்கவில்லை. பிற 27 மாவட்டங்களில் தக்க தனி மனித இடைவெளியைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பிற வகுப்பு மாணவர்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.பாடப் புத்தக வினியோகம்ஒரு வாரத்தில், மாணவர் சேர்க்கை முடிவடைந்ததும், பாடப் புத்தக விநியோகம் தொடங்கும். ஏற்கனவே, அனைத்து மாவட்டங்களில் உள்ள குடோன்களுக்கும் பாடப்புத்தகங்கள் சென்று சேர்ந்துவிட்டன. மாணவர் சேர்க்கை நடந்து முடியும்போது சரியாக பாடப் புத்தகங்களை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்.மாணவர் சேர்க்கை9ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்பதால், அதை வைத்து, 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை செய்வதில் நடைமுறைச் சிக்கல் எழவில்லை.பள்ளிகள் தறப்புபள்ளிகளை திறந்து பாடங்களை நடத்துவது குறித்து இப்போதுவரை எதுவும் யோசிக்கவில்லை. ஏனென்றால் இப்போதைக்குப் பள்ளிகள் திறக்கப்படாது. கல்வித் தொலைக்காட்சி, ஆன்லைன் போன்றவற்றின் மூலம், இப்போது மாதிரி கல்வி கற்பித்தல் நடைபெறும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்..:

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459