சைபர் பாதுகாப்பு துறையில் வெளிநாடுகளில் கொட்டி கிடக்கும் வேலைகள்.. ஒரு கோர்ஸை முடித்தால் போதும் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

24/05/2021

சைபர் பாதுகாப்பு துறையில் வெளிநாடுகளில் கொட்டி கிடக்கும் வேலைகள்.. ஒரு கோர்ஸை முடித்தால் போதும்

 


டெல்லி: இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சைபர் பாதுகாப்புத் துறையில் பணிபுரிய விருப்பமா? சைபர் பாதுகாப்பு குறித்து சைபர் செக்யூரிட்டி தேசிய அகாடமியின் ஆன்லைன் கோர்ஸ் மூலம் இந்தத் துறையில் எளிதில் வேலைகளைப் பெறலாம்.வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் சைபர் பாதுகாப்பு என்பது மிக மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. விலையுர்ந்த பொருட்களுக்கு நாம் அளிக்கும் அதே அளவு பாதுகாப்பைக் கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தரவுகளும் தர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.உலகெங்கும் தொடர்ந்து நடைபெற்று வரும் ஹேக்கிங் தாக்குதல்கள் காரணமாக சைபர் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள சைபர் செக்யூரிட்டி தேசிய அகாடமி சைபர் பாதுகாப்பு குறித்து பல்வேறு கோர்ஸ்களை அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் இந்த கோர்ஸ்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு, +2, டிப்பளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு என அனைவரும், தங்கள் படிப்பிற்கு ஏற்ப இருக்கும் கோர்ஸ்களில் சேரலாம். படிப்புகள்: சைபர் பாதுகாப்பு அதிகாரி, சைபர் பாதுகாப்பு நிர்வாகத்தில் டிப்ளோமா, சைபர் பாதுகாப்பு நிர்வாகத்தில் பிஜி டிப்ளோமா, சைபர் பாதுகாப்பில் சான்றிதழ் கோர்ஸ்எஸ்சி, எஸ்டி, பிசி, ஓ.பி.சி, ஈபிசி, சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் ஆகியோருக்கு தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 60% வரை கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. சைபர் செக்யூரிட்டி படிப்புகளை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு சைபர் பாதுகாப்பு அதிகாரி, தகவல் அதிகாரி, தகவல் ஆய்வாளர், ஐடி பாதுகாப்பு பொறியாளர், பாதுகாப்பு ஆய்வாளர்கள், கிரிப்டாலஜிஸ்டுகள், கல்வி நிறுவனங்களில் பயிற்சியாளர் / ஆசிரியர் எனப் பல வேலைகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கொட்டி கிடக்கின்றன. கூடுதல் தகவலுக்கு: ..ஆன்லைனில் அப்ளே செய்ய கடைசி நாள்: 27/06/2021மொபைல் எண்: 7893141797

No comments:

Post a Comment