ஆசிரியர்கள் சம்பளத்தைக் கண்டு கதறுவோருக்காக ஓர் பதிவு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

21/05/2021

ஆசிரியர்கள் சம்பளத்தைக் கண்டு கதறுவோருக்காக ஓர் பதிவு

 


ஆசிரியர்கள் ஐம்பது வயது வரை கூட படித்துக் கொண்டுள்ளனர், ஓய்வு பெறும் வரை பயிற்சிகள் எடுத்துக் கொண்டுள்ளனர்.


ஆனால் படிக்கிற காலத்தில் படிக்காமல் ஊரைச் சுற்றிவிட்டு பள்ளி பக்கம் ஒதுங்காமலும், வேலைக்குப் போகிற காலத்தில் வெட்டியாக காலந்தள்ளியும் காலச்சக்கரத்தில் ஓடும் பலருக்கு கண் உறுத்தலோ ஆசிரியர் சம்பளம். இன்னும் இந்த வயிற்றெரிச்சல் படும் கூட்டத்தை பலவகையாக வகைப்படுத்தலாம். நாகரீகம் கருதி குறிப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. அந்தக் காலத்தில் ஆசிரியர் பயிற்சிக்கு செல்வதையே ஒருசாரார் சற்று குறைத்து மதிப்பிட்டிருக்கிறார்கள்.  ஆனால் இன்று சம்பளத்தைக் கண்டு கூப்பாடு போடுகிறார்கள். ஒரே பள்ளியில் படித்தாலும் எல்லோரும் ஒரே மாதிரியாகவா முன்னேறி வாழ்கிறார்கள். அவரவர் படிப்பிற்கு செலவிட்ட நேரம், உழைப்பு அவரவர்களை உயர்த்தி இருக்கிறது.


   வயிறெரிவோர் டயலாக்கில் ஒன்று மக்கள் வரிப்பணத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் என்று... ஆனால் இந்தக் கூட்டம் என்ன வரி செலுத்தியிருக்கும் என்று பார்த்தால்......     மேலும் விடுமுறையை அறிவித்தது அரசாங்கம். ஆசிரியர்கள் வர இயலாது எனச் சொல்லவில்லை என்பதை ஓட்டுப் போட மட்டும் அரசுப்பள்ளிக்கு வருவோர் கவனிக்கனும். ஆசிரியர்கள் தினக்கூலி அல்ல. இங்கே டெண்டர் உடன் ஒப்பிட விரும்புகிறேன். டெண்டர் முடிவானபின்னர் விலை மாற்றங்களுக்கேற்ப விலையை மாற்ற முடியாது, அதன் காலம் வரை ஒப்பந்தம் நிறைவேற வேண்டும்.  அதுபோலவே ஆசிரியர்கள் பணியேற்ற பின் பேரிடர் காலத்தில் அரசு விடுமுறை அறிவிக்கும்போது அதற்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்க இயலாது என்பதை கதறுவோர் கவனிக்கனும்.   இன்று புதிதாக ஆசிரியர் பணியில் சேருவோர் வருமானவரி கட்டுமளவிற்குக்கூட அவர்களது சம்பளம் இருக்கவே வாய்ப்பில்லை. பத்து, பதினைந்து ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்களது சம்பளத்தை கணக்குப் பார்ப்பது வேடிக்கையானது. பத்தாயிரம் வைத்து குடும்பம் நடத்தும் பலர் இருக்கிறார்கள் என மேதாவிகள் பதிவுகளில் காணமுடிகிறது. இந்த அறிவெல்லாம் இருக்கு, ஆனால் படிக்கிற காலத்தில் படிக்க அறிவு இல்ல... ஏன் அங்கே வரை.... இப்போது அரசாங்கம் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றவே வலிக்குது இதுபோன்ற மேதாவிகளுக்கு..... மாஸ்க் போடாம சுத்திக்கிட்டு, கடைத்தெருவில் முண்டியடித்துக் கொண்டு... கவனமும் கணக்கும் ஆசிரியர்கள் சம்பளம் மீது... இதெல்லாம் என்னய்யா பொழப்பு.... வாத்தியார் சம்பளத்தை பாதியாக்கினால் எல்லோருக்கும் பத்தாயிரம் கொடுக்கலாம் என பொருளாதார நிபுணத்துவ ஆலோசனை வேறு...    கல்வி கரை சேர்க்கும். அதைத் தவறவிட்டவன் தவளை மாதிரி கத்த வேண்டியது தான். இப்போதும் மோசமில்லை. இப்போது திட்டமிட்டு உழைத்து உருப்பட வழி தேட வேண்டும்  வயிறெரியும் கூட்டம்.  பக்கத்து வீட்டுக்காரன் வசதியாக இருக்கிறான் எனில் அதற்காக அவன் உழைத்த உழைப்பை உற்றுப்பார்க்க வேண்டும், அவன் ஏதாவது கொடுப்பான் என்றோ அல்லது அவனிடம் பாதியைப் பிடுங்கி பத்துபேருக்கு கொடுக்கலாமே என கீழே படுத்து விட்டத்தைப் பார்த்து கணக்குப் போட்டு கதறுவது கடைசியில் ரீசார்ஜ் பண்ணக்கூட வழியில்லாத நிலைமைக்கு கொண்டுபோய்விடும். அப்புறம் ஆசிரியர்கள் எங்களுக்கு பாதி ரீசார்ஜ் பண்ணிவிடலாமே எனக் கேட்கத் தோன்றும். இப்படியே போய் ஒரு பயனும் இல்லை. இருக்கிற காலத்தில், ஆசிரியர் சம்பளத்தைக் கண்டு கதறுவோரே, ஆகவேண்டியதைப் பாருங்கள்

No comments:

Post a Comment