நாங்கள் சொல்லும் திருத்தங்களை ஏற்றால் மட்டுமே புதிய கல்விக் கொள்கையை ஏற்போம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

17/05/2021

நாங்கள் சொல்லும் திருத்தங்களை ஏற்றால் மட்டுமே புதிய கல்விக் கொள்கையை ஏற்போம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

 


தமிழ்நாடு அரசின்  கருத்துகளை தெரிவிக்கும் வகையில் கல்வி அமைச்சரும் பங்கேற்க வேண்டும் என்கிற எங்களது கோரிக்கையை ஏற்காததால் மத்திய அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று  தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 

 

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,\"கொரோனா காலத்தில் இணைய வழிக் கல்வி உள்ளிட்டவை  தொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தவுள்ளதாக எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பட்டது. ஆனால், இந்த கூட்டத்தில் அதிகாரிகள் மட்டும் பங்கேற்பது கூட்டாட்சிக்கு எதிரானது.  மாநில கல்வி அமைச்சர்களும்  பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினோம். இதற்குரிய பதிலை மத்திய அரசு தற்போது வரை அளிக்காததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மெயில் தொடர்பாக பதில் எதுவும் வரவில்லை. பதில் வரும் என்று எதிர்பார்க்கிறோம். பதில்  வராத சூழலில் டெல்லிக்கு சென்று அல்லது மின்னஞ்சல் மூலம் தமிழ்நாட்டின்  கருத்தை முன் வைப்போம். பதிவு செய்வோம் என்றார்.மேலும், கடந்த, 2019ம் ஆண்டே புதிய கல்வி வரைவு தொடர்பாக, தற்போதைய முதலமைச்சர்,  எதிர்கட்சி தலைவராக இருக்கும் போதே, கல்விக் கொள்கையின்  பாதங்களை ஆராய்ந்து அறிக்கை தயாரித்து,   நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் கொடுத்தோம்.ஆனால் அவர்கள் எதையும் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், கல்வியை தனியார் மையப்படுத்துதல், குலக்கல்வி முறை போன்றவை தான் புதிய கல்விக் கொள்கையில் தெரிகிறது.3,5,8 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு நடத்தி மன அழுத்தத்தை ஏற்படுத்தும் முறை, இட ஒதுக்கீடு இல்லை;  இருமொழிக் கொள்கைக்கு வேட்டு வைக்கும் நிலை மற்றும் இந்தி, சமஸ்கிருத்தை திணிக்கும் முயற்சி போன்றவை உள்ளன. இவற்றை எல்லாம் நீக்க வேண்டும்.  எங்களை அழைத்து இருந்தால் முறையாக தெரிவித்து இருப்போம்.புதிய கல்விக் கொள்கை குறித்த தமிழக அரசின் கருத்துகளை தெரிவிக்க, முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்.\" என்றார். 

 

மேலும், புதிய கல்விக் கொள்கை பாதகமானது. குலக்கல்வித் திட்டமாக உள்ளது. இதில் நாங்கள் அரசியலாக பார்க்கவில்லை. மாணவர் நலனே முக்கியம். மோதல் போக்குடன் இல்லாமல்,  இணக்கமாக செயல்படவே விரும்புகிறோம்.நாங்கள் சொல்லும் திருத்தங்களை ஏற்றால் மட்டுமே புதிய கல்விக் கொள்கையை ஏற்போம்.-News18

No comments:

Post a Comment