முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருநாள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு உத்தரவு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

19/05/2021

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருநாள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு உத்தரவு.


முதல்வரின் நிவாரண நிதிக்கு தமிழக ஐஏஎஸ் கேடரில் பணியாற்றுவோரின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்துகொள்ள  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகம் கோவிட்-19ல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் கேடரில்  பணியாற்றுவோர் கொரோனவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிடும் வகையில் ஒரு நாள் சம்பளத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளது.


இதுதொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் விருப்பம் தெரிவித்தும் கடிதம் வரப்பெற்றிருந்தது. இதையடுத்து தமிழக அரசும் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்யும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த நிதியை மே அல்லது  ஜூன் மாதத்தில் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ள தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


IMG_20210519_074536


மேலே குறிப்பிட்டுள்ள அரசாங்க உத்தரவைப் பார்க்கவும்.  அனைத்து RJDS / PAOS / TO களும் உங்கள் மாவட்டத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் டி.டி.ஓ.எஸ்ஸைத் தொடர்பு கொள்ளவும், தமிழ்நாடு மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடு / நிவாரண நடவடிக்கைகளுக்கு 2021 மே மாதத்தில் ஒரு நாள் சம்பளத்தின் பங்களிப்பைக் குறைப்பதற்காக அவர்களுக்கு வழிகாட்டவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.  .  அத்தகைய விலக்கு அவர் ஆணையாளருக்கு வழங்கப்பட வேண்டும்

No comments:

Post a Comment