குட் நியூஸ்... மின் கட்டணம் செலுத்தக் கால அவகாசம் நீட்டிப்பு.. தமிழக அரசு உத்தரவு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

10/05/2021

குட் நியூஸ்... மின் கட்டணம் செலுத்தக் கால அவகாசம் நீட்டிப்பு.. தமிழக அரசு உத்தரவு


சென்னை: தமிழக அரசு மின் கட்டணத்தைச் செலுத்தக் கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்றுமுதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் ஊரடங்கைக் கருத்தில் கொண்டு மின் கட்டணத்தைச் செலுத்தும் கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாழ்வழுத்த மின் நுகர்வோர்களின் மின் கட்டணம், இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி தேதி வரும் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இருந்தால், கடைசி நாள் வரும் மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 3-வது முறையாக.... இப்போது கொரோனாவை காரணமாக வைத்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு!மேலும், மின்கட்டணத்தைக் கவுண்டர்களில் செலுத்துவதைத் தவிர்த்து, முடிந்தவரை ஆன்லைனில் முறையில் செலுத்துமாறும் தமிழ்நாடு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது..:

No comments:

Post a Comment