கொரோனாவுக்கு எதிராக புதிய மருந்து கண்டுபிடிப்பு! - ஆசிரியர் மலர்

Latest

10/05/2021

கொரோனாவுக்கு எதிராக புதிய மருந்து கண்டுபிடிப்பு!

 


கொரோனா சிகிச்சைக்காக தற்போது, ரெம்டெசிவிர் மட்டுமே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது.இதனால், ரெம்டெசிவர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கொரோனாவுக்கு எதிராக புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. பவுடர் வடிவிலான இந்த மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை டி.ஆர்.டி.ஓ., அமைப்பு, டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது. இந்த மருந்துக்கு டிஆக்ஸி டி- குளுகோஸ் ((2-deoxy-D-glucose (2-DG)) எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

 

பரிசோதனையில் இந்த மருந்தை எடுத்துக்கொண்ட நோயாளிகள் தொற்றிலிருந்து வேகமாகக் குணமடைவதும், நோயாளிகள், ஆக்சிஜனை சார்ந்திருக்கும் நிலையை வெகுவாகக் குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 3-ம் கட்ட பரிசோதனையில் இருக்கும் இந்த மருந்துக்கு மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்து கொரோனா சிகிச்சையில் புதிய மைல்கல்லாக அமையும் என, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459