அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளுக்கான மறு தேர்வு ஒத்திவைப்பு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளுக்கான மறு தேர்வு ஒத்திவைப்பு.

 

665419

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரி மாணவர்களுக்கான மறு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகிய 4 வளாககல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் கடந்த ஆண்டுநவம்பர்- டிசம்பரில் நடத்தவேண்டியபருவத்தேர்வு கடந்த பிப்ரவரி - மார்ச்மாதங்களில் நடத்தப்பட்டது.


இணையவழியில் நடைபெற்ற இந்த தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்பகோளாறு காரணமாக வளாக கல்லூரி மாணவர்களால் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு மறு தேர்வு நடத்தஅண்ணா பல்கலை. முடிவு செய்தது. அதன்படி, இந்த தேர்வானது மே 3-ம் தேதி முதல் நடக்கவிருந்தது. இந்நிலையில், கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதால், மறு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment