கொரோனா எங்கிருந்து உருவானது?”- 90 நாட்களில் அறிக்கை கேட்கும் அமெரிக்க அதிபர் பைடன் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

கொரோனா எங்கிருந்து உருவானது?”- 90 நாட்களில் அறிக்கை கேட்கும் அமெரிக்க அதிபர் பைடன்

 


கொரோனா தொற்று முதன்முதலில் எப்படி உலகில் பரவியது? விலங்கிலிருந்தா அல்லது ஆய்வுக்கூடத்தில் இருந்தா என்ற அறிக்கையை 90 நாட்களில் தனக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அமெரிக்க உளவுத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் அதிபர் ஜோ பைடன்.கொரோனா தொற்று வவ்வால் மாதிரியான பிற உயிர்களிலிருந்து பரவியதாக ஒரு சாராரும். ஆய்வு கூடத்தில் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தினால் கொரோனா தொற்று சீனாவிலிருந்து உலகிற்கு பரவியதாகவும் பல கதைகள் உலாவிக் கொண்டிருக்கும் நிலையில் உலகையே ஆட்டிப்படைத்து வரும் இந்த தொற்றின் தோற்றம் குறித்த கேள்வியை எழுப்பி உள்ளார் பைடன்.  

 

“இது குறித்த ஒரு இறுதி முடிவை எட்ட உங்களது முயற்சியை இரட்டிப்பாக கூட்டுங்கள். அதன் மூலம் ஒரு இறுதி முடிவுக்கு வந்து என்னிடம் 90 நாட்களில் அறிக்கையை சமர்ப்பியுங்கள்” என சொல்லியுள்ளாரம் பைடன்.  

 

ஏற்கனவே இது குறித்து விசாரிக்க பன்னாட்டு அமைப்புகள் வூஹானில் முகாமிட்டிருக்க பைடனின் இந்த உத்தரவு அதில் வேகத்தை கூட்டியுள்ளது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீனாவின் ஆய்வகம் ஒன்றில் பணியாற்றிய மூன்று ஊழியர்கள் உலகின் முதல் கொரோனா தொற்று என கண்டறியப்படுவதற்கு முன்னதாக கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இருப்பினும் சீனா அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது. 

No comments:

Post a Comment