வேண்டாம் அலட்சியம்.. நெருங்கும் அபாயம்.. சென்னையில் மட்டும் இன்று 72 பேர் பலி.. தமிழகத்தில் ஷாக்! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

08/05/2021

வேண்டாம் அலட்சியம்.. நெருங்கும் அபாயம்.. சென்னையில் மட்டும் இன்று 72 பேர் பலி.. தமிழகத்தில் ஷாக்!


சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 241 பேர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 72 பேர் மரணம் அடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவை ஒப்பிடும் போது குறைவு என்றாலும், அந்த நிலையை தமிழகமும் எட்டும் அபாயத்தில் தான் உள்ளது.சென்னையில் நிலைமை கவலை அளிக்கும் வகையில் உள்ளது. படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் வசதிகள், ஐசியு வசதிகள் செய்து கொடுப்பதற்கு வசதிகள் இப்போது செய்து கொடுக்கப்பட்டாலும், சிரமங்களையும் சிக்கலையும் எதிர்கொள்ளாமல் இருக்க இனி மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே கசப்பான உண்மை.தீவிரமான கொரோனாபணம் கோடிக்கணக்கில் கொட்டிக்கிடந்தாலும் கொரோனா தீவிரமாக பாதிக்கப்பட்டால் நிலைமை விபரீதம் ஆகவே அதிக வாய்ப்பு உள்ளது அதற்கு பல விஐபிக்களின் மரணங்களே சாட்சி. கொரோனாவின் தீவிரத்தை உணர்த்தவே இந்த கருத்தை சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தமிழகம் இதுவரை சந்திக்காத பெருந்துயரமான தொற்று நோய் காலத்தில் உள்ளது.சென்னையில் மரணம்அதிலும், கொரோனா காலங்களில் இதுவரை சந்திக்காத உச்சகட்ட பாதிப்பை ஒவ்வொரு நாளும் சந்தித்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் இன்று 241 பேர் கொரோனாவின் தீவிரத்தால் மரணம் அடைந்துள்ளனர் என்று அரசின் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட மரணங்கள்சென்னையில் ஒரே நாளில் 72 பேர் மரணம் அடைந்துள்ளனர். திருவள்ளூரில் 17 பேர், திருச்சியில் 12 பேர், திருப்பத்தூரில் 11 பேர், சேலத்தில் 10 பேர், கடலூரில் மற்றும் கன்னியாகுமரியில் 9 பேர் பலியாகி உள்ளனர். தஞ்சாவூரில் 7 பேர், மதுரையில் 7 பேர், திண்டுக்கல் மாவட்டத்தில் 6 பேர் ஒரே நாளில் கொரோனாவின் தீவிரத்தால் பலியாகி உள்ளனர். வேலூர், விழுப்புரம், விருதுநகர், தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தலா 5 பேர் பலியாகி உள்ளனர்.கிருஷ்ணகிரிகோவை, கரூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா4 பேரும், திருநெல்வேலி, திருப்பூர், தர்மபுரியில் தலா 3 பேரும், தேனி, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சியில் தலா 2 பேரும் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவாரூர், ஈரோடு, புதுக்கோட்டையில் தலா ஒருவர் பலியாகி உளளனர், அரியலூர், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கையில் இன்று எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

No comments:

Post a Comment