55 கி.மீ. வேகத்தில் வீசப்போகுது காற்று.. ஐந்து நாளைக்கு வெளுக்க போகிறது மழை... எங்கெங்கு தெரியுமா? - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

55 கி.மீ. வேகத்தில் வீசப்போகுது காற்று.. ஐந்து நாளைக்கு வெளுக்க போகிறது மழை... எங்கெங்கு தெரியுமா?


சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த நேரத்திற்கு தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் கன்னியாகுமரி, தென்காசி , மதுரை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 26.05.2021ம் தேதியான இன்று தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும் . இதேபோல் கன்னியாகுமரி, தென்காசி , மதுரை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். திருப்பூர், நாமக்கல், சேலம் , தர்மபுரி, கிருஷ்ணகிரி , திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி , திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை ,சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.தென்காசி திருநெல்வேலி27.5.2021 அன்று தேனி திண்டுக்கல் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கன்னியாகுமரி, தென்காசி , திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.28ம் தேதி எப்படி28ஆம் தேதி மற்றும் 29ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.மேற்கு தொடர்ச்சி மலை30ம் தேதி தேனி திண்டுக்கல் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.புயல்காற்று வீசும்வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தரைக்காற்று ஒரு சில நேரங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.குமரி மழைகடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிக மிக கனமழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மயில் ஆடியில் அதிகபட்சமாக 24 சென்டி மீட்டர் மழையும் , கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் 19 சென்டிமீட்டர் மழையும் , கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் 17 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் நாகர்கோவிலில் தலா 15 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.கடலுக்க போக வேண்டாம்குமரிக் கடல் மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இன்றும் நாளையும் வீசக்கூடும். நாளை தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதேபோல் நாளை வடமேற்கு வங்கக்கடலில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்மேற்கு அரபிக்கடலில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று முதல் 30-ஆம் தேதி வரை வீசக்கூடும். எனவே மேற்கண்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்." இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.., 

No comments:

Post a Comment