முதல்வரின் முத்தான '5' கையெழுத்து - 'ஆவின்' பால் விலை.. லிட்டருக்கு '3' ரூபாய் குறைப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

முதல்வரின் முத்தான '5' கையெழுத்து - 'ஆவின்' பால் விலை.. லிட்டருக்கு '3' ரூபாய் குறைப்பு


சென்னை: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்ற நிலையில், ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்டுள்ளார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றிப் பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார். அப்பா நான் முதல்வராயிட்டேன்... கருணாநிதி படத்தின் முன் கண் கலங்கிய ஸ்டாலின் - அறுதல் சொன்ன அக்கா ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான பதவியேற்பு விழாவில், ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க, அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.ஸ்டாலின் கையெழுத்துஇந்நிலையில், முதல்வராக பதவியேற்ற பிறகு தலைமை செயலகத்திற்கு வந்த மு.க.ஸ்டாலின், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதல் கையெழுத்தாக ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கும் கோப்பில் கையெழுத்திட்டார். அதேபோல், அனைத்து பெண்களுக்கும் நகரப் பேருந்துகளில் பயணிக்க இலவசம் என்ற கோப்பிலும், கொரோனா நிவாரணமாக ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.4000 வழங்கப்படும் என்ற கோப்பிலும் கையெழுத்திட்டார். இதில், முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட உள்ளது.பெரும் நிம்மதிஅதேபோல், புகார் மனுக்களுக்கு 100 நாளில் தீர்வு காண புதிய துறை உருவாக்கும் கோப்பிலும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற கோப்பிலும் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். இவை அனைத்தும் ஏழை, எளிய மக்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் உத்தரவுகளாகும்.விலையேற்றிய அதிமுக அரசுகுறிப்பாக, ஆவின் பால் விலை ஏற்றம். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 2 கோடியே 6 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 25 லட்சம் லிட்டர் பால் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், பால் கொள்முதல் விலையை கடந்த 2019ம் ஆண்டு முந்தைய அதிமுக அரசு உயர்த்தியது. இதனால், அனைத்து வகையான ஆவின் பால் வகைகளும் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது. இது ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் இன்னலாக அமைந்தது.காப்பாற்றிய திமுக அரசுபட்ஜெட் போட்டு, குடும்பம் நடத்தும் லோ மிடில் கிளாஸ் மக்கள், இந்த விலையேற்றால் கடுமையாக அவதிப்பட்டனர். சில குடும்பங்களில், 2 பாக்கெட்டுகள் வாங்கியதை குறைத்து 1 பாக்கெட் மட்டும் வாங்கும் அவல நிலை உருவானது. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.

No comments:

Post a Comment