தமிழகத்தில் 35,873 பேருக்கு தொற்று.. 422 பேர் உயிரிழப்பு.. சென்னையில் தொடர்ந்து குறையும் பாதிப்பு! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

23/05/2021

தமிழகத்தில் 35,873 பேருக்கு தொற்று.. 422 பேர் உயிரிழப்பு.. சென்னையில் தொடர்ந்து குறையும் பாதிப்பு!


 சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 422 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 2-வது நாளாக குறைந்துள்ளது. உயிரிழப்பும் குறைந்துள்ளது.பாதிப்பு குறைகிறதுகொரோனாவை தடுக்க தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து, பால் கடைகள் தவிர மளிகை, காய்கறி கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,483பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உயிரிழப்பும் குறைகிறதுஇதனால் மொத்த பாதிப்பு 18,42,344 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 422 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 81 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 20,468 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 25,196 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 15,27,733 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்சிகிச்சை பெறுபவர்கள்2,94,143 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,68,425 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,57,54,662 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 5169 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்பு அச்சுறுத்தி வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரிதது வருகிறது.கோவையில் ஆதிக்கம்கோவையில் மட்டும் 3944 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 1982 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 897 பேருக்கும், மதுரையில் 1139 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில்1160 பேருக்கும், திருவள்ளூரில் 1259 பேருக்கும், திருச்சியில் 1407 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 1446 பேருக்கும், விருதுநகரில் 669 பேருக்கும், ஈரோட்டில் 1352 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment