தமிழகத்தில் 25000 நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு.. இந்த 3 மாவட்டங்களில் வைரஸ் பரவல் மிக மிக மோசம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழகத்தில் 25000 நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு.. இந்த 3 மாவட்டங்களில் வைரஸ் பரவல் மிக மிக மோசம்


 தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 24,898 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டு, கோவை ஆகிய நகரங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு 2000ஐ கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வைரஸ் பரவலின் விகிதம் சுமார் 10% வரை அதிகரித்துள்ளது.  இதே வேகத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரித்தால் மிக மோசமான நிலையில் தமிழகம் தள்ளப்படும் என்பதால், மாநில அரசு பல புதிய கட்டுப்பாடுகள் அறிவித்தது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று அமலுக்கு வந்தது.25 ஆயிரத்தை நெருங்கும் தினசரி பாதிப்புதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல உயர்ந்து 25 ஆயிரத்தை நெருங்குகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய 27 உட்பட புதிதாக 24,898 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 810 பேர் 12 வயதுக்கு உட்பட சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மாநிலத்தில் 12,97,500 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.தினசரி உயிரிழப்புதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 195 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 114 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்; 81 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களாகும். அதேபோல இணை நோய்கள் இல்லா 45 பேரும் 50 வயதுக்கு உட்பட்ட 41 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா காரணமாகப் பதிவு செய்யப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 14,974 ஆக உயர்ந்துள்ளது.ஆக்டிவ் கேஸ்கள்தமிழகத்தில் தற்போது 1.31 லட்சம் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி ஆக்டிவ் கேஸ்கள் ஏழாயிரம் முதல் எட்டாயிரம் வரை அதிகரித்து வருவது சுகாதாரத் துறை வல்லுநர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் மறுபுறம் 21,546 பேர் கொரோனா தொற்றிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 1,51,058 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.மாவட்ட வாரியாக பாதிப்புமாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது வழக்கம்போல சென்னையில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ளது. தலைநகரில் தொடர்ந்து 5ஆம் நாளாகத் தினசரி வைரஸ் பாதிப்பு 6000ஐ கடந்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 6678 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 69 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரே நாளில் 6047 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 33,316ஆக உயர்ந்துள்ளது.கோவை &; செங்கல்பட்டுசென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு 2000ஐ கடந்துள்ளது. கோவையில் 2068 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2039 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல செங்கல்பட்டில் 16 பேரும் கன்னியாகுமரியில் 14 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

No comments:

Post a Comment