பதவியேற்கும் முன்பே அசத்தும் ஸ்டாலின்.. 1,212 ஒப்பந்த செவிலியர்களின் பணி நிரந்தரம்.. அரசு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

04/05/2021

பதவியேற்கும் முன்பே அசத்தும் ஸ்டாலின்.. 1,212 ஒப்பந்த செவிலியர்களின் பணி நிரந்தரம்.. அரசு அறிவிப்பு


சென்னை: தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருந்த 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மே 6-ம் தேதி முதல் கூடுதலாக பல கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. செவிலியர்கள் பங்களிப்புகொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பங்களிப்பு அளப்பரியது. நாடு முழுவதும் செவிலியர்கள் சுயநலம் மறந்து மிகுந்த சேவை அர்ப்பணிப்புடன் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசு, ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருக்கும் 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றம் செய்யப்ட்டுள்ளதாக இனிப்பான செய்தியை தெரிவித்துள்ளது.பணி நிரந்தரம்இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருந்த 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். 2015-16-ல் எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. வருகிற 10-ம் தேதிக்கு முன்னதாக இவர்கள் 1,212 பேரும் சென்னையில் பணியில் சேர வேண்டும்.சம்பளம் ரூ.40,000 ஆக அதிகரிக்கும்பின்னர் 1,212 பி[பேரும் பல்வேறு மாவட்டங்களுக்கு பணிக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். பணி நிரந்தரம் செய்யப் பட்ட செவிலியர்கள் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபடுவார்கள். பணி நிரந்தரம் செய்யப்பட்டதால் 1,212 செவிலியர்களுக்கான மாத ஊதியம் ரூ.15,000லிருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கும் என்று தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது.புதிய அரசு அசத்தல்தற்போது பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ள 1,212 செவிலியர்களின் ஒப்பந்த பதிவு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில் தற்போது தமிழக அரசு இவர்களை பணி நிரந்தரம் செய்துள்ளது. தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் வருகிற 7-ம் தேதி பதவியேற்க உள்ளார். பதவியேற்பதற்கு முன்னதாகவே, ஒப்பந்த செவிலியர்களின் நீண்ட ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிய ஸ்டாலினுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.'

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459