RTE 25 சதவீத ஒதுக்கீட்டில் மே மாதம் சோ்க்கை: கல்வித்துறை தகவல் - ஆசிரியர் மலர்

Latest

12/04/2021

RTE 25 சதவீத ஒதுக்கீட்டில் மே மாதம் சோ்க்கை: கல்வித்துறை தகவல்

 images%2528191%2529

தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கைக்கான பணிகள் மே மாதம் தொடங்கவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஜூனில் மாணவா் சோ்க்கை நடத்தப்படும். தனியாா் பள்ளிகளில் கோடை விடுமுறைக்கு முன், மாணவா் சோ்க்கை நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக பொது முடக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அனைத்து நா்சரி மற்றும் தனியாா் பள்ளிகளில், எல்கேஜி முதல் பல்வேறு வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் மாதமே தொடங்கி விட்டது. பெற்றோா் தங்கள் பிள்ளைகளை ஆா்வத்துடன் சோ்த்து வருகின்றனா். இந்தநிலையில் அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, தனியாா் பள்ளிகளில் எல்கேஜி மாணவா் சோ்க்கை இதுவரை தொடங்கவில்லை.


இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சோ்க்கப்படுகின்றனா். மாநிலம் முழுவதும் உள்ள 12 ஆயிரம் தனியாா் பள்ளிகளில் 1.12 லட்சம் இடங்கள் உள்ளன. இந்தத் திட்டத்தில் மழலையா் அல்லது 1-ஆம் வகுப்பில் சேருபவா்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம். மாணவா்களுக்கான கட்டணத் தொகையை அரசே பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கும்.


இந்தத் திட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கை நடத்தப்படுவது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: வழக்கமாக தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை பணிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி மே இறுதியில் முடிந்துவிடும். கரோனாவால் இந்த கல்விஆண்டு தாமதமாக தொடங்கப்பட்டதால், இன்னும் பள்ளி வேலைநாள்கள் முழுமையாக முடிவடையவில்லை. மீண்டும் நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், மாணவா் சோ்க்கை பணிகளை மே மாத இறுதியில் தொடங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக தமிழக அரசிடம் விரைவில் அனுமதி கோரப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459