சிபிஎஸ்இ தேர்வை கேன்சல் பண்ணுங்க''.. மத்திய அரசுக்கு, பிரியங்கா கடிதம். - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

சிபிஎஸ்இ தேர்வை கேன்சல் பண்ணுங்க''.. மத்திய அரசுக்கு, பிரியங்கா கடிதம்.


டெல்லி: கொரோனா அச்சுறுத்தி வருவதால் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரியங்கா காந்தி, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.பேரழிவு தரும் கொரோனா இரண்டாவது அலையில் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.கொரோனாவின் கொடூரம்நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1,50,000-ஐ கடந்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்க தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் சிபிஎஸ்இ போர்டு தேர்வுகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சிபிஎஸ்இ தேர்வுகள்சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 7 வரை நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 15 வரை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிவேகமாக சென்று வருவதால் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.பீதியில் ஆசிரியர்கள்இந்த நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரசின் பிரியங்கா காந்தி, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ' இந்த கடினமான வேளையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். இப்போது மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நடைமுறையில் சாத்தியமற்றது. மாணவர்கள், அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் பீதியில் உள்ளனர்.பிரியங்கா காந்தி கோரிக்கைகொரோனா அச்சறுத்தி வரும் நிலையில் சிபிஎஸ்இ தேர்வு எழுத குழந்தைகளை கட்டாயப்படுத்துவதன் மூலம், எந்தவொரு தேர்வு மையமும் கொரோனா ஹாட்ஸ்பாட் என்று நிரூபிக்கப்பட்டால், மத்திய அரசும், சிபிஎஸ்இ வாரியமும்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். எனவே மத்திய அரசு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்துசெய்யவேண்டும்" என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.ராகுல் காந்தி ஆதரவுபிரியங்கா காந்தியின் கருத்துக்கு அவரது சகோதரரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ' பேரழிவு தரும் கொரோனா இரண்டாவது அலையில் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். கடுமையான முடிவுகளை எடுப்பதற்கு முன் அனைத்து தரப்பினரையும் அரசு கலந்தாலோசிக்க வேண்டும். இந்திய இளைஞர்களின் எதிர்காலத்துடன் மத்திய அரசு எத்தனை எண்ணிக்கையில் விளையாட விரும்புகிறது? என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.'! 

No comments:

Post a comment