பட்டங்கள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பட்டங்கள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

 images%2528156%2529


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தின் 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டங்களைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 


42 ஆவது வருடாந்திர பட்டமளிப்பு விழாவுக்கு இந்தப் பல்கலைக்கழகத்தால் 31.3.21 அன்று வரையிலான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவ-மாணவிகளிடம் இருந்து பட்டங் கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பப் படிவம், இதர விவரங்களைப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பங்களை இணையதளத்தில் உள்ள இணைப்பு மூலம் ஆன்லைனி லும் சமர்ப்பிக்கலாம். 

 

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி, உரிய சான்றிதழ்கள், 2 புகைப்படங்களுடன் விண்ணப்பங்களை வரும் ஜூன் 11 ஆம் தேதி மாலைக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். 


இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0422 6611506 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment