சென்னையிலிருந்து ஓட்டுப்போட ஊருக்கு போரிங்களா .. உங்களுக்குத்தான் இது.. - ஆசிரியர் மலர்

Latest

02/04/2021

சென்னையிலிருந்து ஓட்டுப்போட ஊருக்கு போரிங்களா .. உங்களுக்குத்தான் இது..

 .


வரும் 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, சென்னையில் குடி பெயர்ந்துள்ள மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டு போட தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இந்த பேருந்துகள் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை இயக்கப்படுகின்றது. 

தினசரி சென்னையிலிருந்து 2225 பேருந்துகள் செல்வது வழக்கம். தற்போது சிறப்பு பேருந்துகள் ஆக 3900 பேருந்துகளும், மேலும், சில இடங்களில் பிரத்தியேக சிறப்பு பேருந்துகளும் என்று மொத்தமாக 14815 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அத்துடன் திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 2644 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

விடுமுறை தினமான ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 5 உள்ளிட்ட தேதிகளில் இயக்கப்படுகின்றன. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பேருந்துகள் செல்லும் வழி தடங்கள் குறித்த தகவல்களை கீழே காணலாம்.1)மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக பேருந்துகள் செல்லும். 

2)கேகே நகர் பகுதியில் இருந்து ஈசிஆர், புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். 

3)தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து, தஞ்சாவூர், விக்கிரவாண்டி, கும்பகோணம், பண்ருட்டி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும். 

4)தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் வழியே திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் சேத்துப்பட்டு, போளூர், வந்தவாசி, செஞ்சி, மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய ஊர்களுக்குபேருந்துகள் செல்லும். 

5)பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து ஆரணி, வேலூர், ஆற்காடு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், செய்யாறு, ஓசூர் உள்ளிட்ட ஊர்களுக்கு திருத்தணி வழியாக திருப்பதி பேருந்துகள் செல்லும். 

6)புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் (கோயம்பேடு) பகுதியில் இருந்து மேற்குறிப்பிட்ட ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்கு செல்லும்.

குறிப்பாக மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருச்சி, மதுரை ,திருநெல்வேலி, செங்கோட்டை, திருச்செந்தூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுக்கோட்டை, காரைக்குடி, விருதுநகர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், சேலம், ராமநாதபுரம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459