தமிழகத்தில் நடிகர்கள் நாடாள முடியுமா? அடுத்து ஆட்சியை பிடிப்பது யார் - பிலவ வருட தமிழ் பஞ்சாங்கம் - ஆசிரியர் மலர்

Latest

15/04/2021

தமிழகத்தில் நடிகர்கள் நாடாள முடியுமா? அடுத்து ஆட்சியை பிடிப்பது யார் - பிலவ வருட தமிழ் பஞ்சாங்கம்

.


சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று பிலவ வருடத்திய தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது. மழை, வெள்ளம், புயல் எப்படி இருக்கும்? விலைவாசி உயருமா? நீர் வளம் எப்படி இருக்கும் எல்லைப்பிரச்சினை தீருமா என தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது. பிலவ தமிழ் புத்தாண்டில் நாட்டில் என்னென்ன நடைபெறும் என்று பல மாதங்களுக்கு முன்பே தமிழ் பஞ்சாங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.அறுபது ஆண்டுகளுக்கும் இடைக்காட்டுச் சித்தர் அந்தந்த ஆண்டுகளுக்கான பலன்களை வெண்பாவாக பாடி வைத்துள்ளார். பிலவ வருட வெண்பாவை பார்க்கலாம்.பிலவ ஆண்டுக்கான இடைக்காட்டுச் சித்தர் பாடிய வெண்பா: "பிலவத்தில் மாரி கொஞ்சம் பீடை மிகும் ராசர் சல மிகுதி துன்பம் தரும் நலமில்லை நாலுகாற் சீவனெல்லாம் நாசமாம் வெள்ளாண்மை பாலுமின்றிச் செய்புவனம் பாழ்" இந்தப் பாடலுக்கான விளக்கம்... பிலவத்தில் மழை அளவு கொஞ்சமாகவே இருக்கும். நாடாளும் அரசர்களுக்கு நோய் உண்டாகும். பருவம் தவறிப் பெய்யும் மழையால் துன்பம் உண்டாகும். ஆடு மாடுகள் முதலான கால்நடைகள் துயரத்தை அனுபவிக்கும். வேளாண்மை செழித்து வரும் வேளையில் இயற்கையால் பாதிப்பு ஏற்படும் என்று வெண்பா கூறுகிறது.விலை உயரும்குரு கும்ப ராசியில் பயணம் செய்கிறது. கால புருஷ தத்துவப்படி இது 11வது இடம். தமிழ் புத்தாண்டு மகர லக்னத்தில் பிறந்துள்ளது. அதன்படி கணக்கிட்டால் லக்னத்தில் சனி, இரண்டாம் வீட்டில் குரு பயணம் செய்கிறது. இந்த ஆண்டு வியாபாரிகளுக்கு ஆன்லைன் வர்த்தகம் அதிகரிக்கும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது.காற்றழுத்த தாழ்வு மண்டலம்இந்த ஆண்டில் 15 காற்றழுத்த தாழ்வு மண்டலம் உற்பத்தியாகும். 9 காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலஹீனம் ஆகும். 6 காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலமடைந்து புயலாக மாறும். மாமல்லபுரம், ராமநாதபுரம், சென்னை, கடலூர், திருவாரூர் நாகப்பட்டிணத்தில் மழை பெய்யும்.அணைகள் நிரம்பும்இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை நல்ல மழை பொழியும். தமிழகத்தில் உள்ள அணைகள் நிரம்பி வழியும். செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் ஜலப்பிரவாகம் ஏற்படும் தண்ணீர் பஞ்சம் தீரும். சரியான நேரத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்கும்.ஆட்சிக்கு வருவது யார்பிலவ ஆண்டில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகிறது. அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும். சட்டசபைத் தேர்தலில் நடிகர்கள் தொடங்கிய கட்சி படு தோல்வியை சந்திக்கும். பழம்பெரும் கட்சி மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். எதிர்கட்சிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது. அரசியலில் முக்கிய பதவி வகிப்பவர்களுக்கு கெண்டாதி கெண்டம் ஏற்படும்.'

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459