சட்டமன்றத் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை ஊதியம் நிர்ணயம் -தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

சட்டமன்றத் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை ஊதியம் நிர்ணயம் -தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்

 maxresdefault%25281%2529


சட்டமன்ற தேர்தல் பணி யில் ஈடுபடும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை ஊதியம் நிர்ணயம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வரும் 6 ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ம் தேதி நடக்கிறது. அதற்காக தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழி யர்களுக்கு முதற் கட்டம் மற்றும் 2 ம் கட்ட தேர்தல் பயற்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை ஊதியம் நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது. 


இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறிய தாவது : 

சட்டமன்றதேர்தல் மற்றும் மக்களவை இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தல் பணியில் லட்சக்கணக்கான மத்திய , மாநில அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக தனியாக ஊதியம் நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது . அதன்படி மூத்த அதிகாரிக்கு 75,000 , முதன்மை பயிற்றுநர் 72,000 , வாக்குப் பதிவு தலைமை அலுவலர் , வாக்கு எண்ணிக்கை சூப்பர்வைசர் , அறை சூப் பர்வைசர் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு 1350 ம் , வாக்குப்பதிவு அலுவலர் , எண்ணிக்கை உதவி அலு வலர் ஆகியோருக்கு 250 ம் மற்றும் கடைநிலை ஊழி யர்களுக்கு ஒரு நாளைக்கு 1150 ம் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு உணவு படிக்கு 1150 ம் , வீடியோ கண்காணிப்புகுழு , வீடியோ பார்வையிடும் குழு , கணக்கு குழு , தணிக்கை கண்காணிப்பு குழு , தேர்தல் கண்காணிப்பு அறை , தகவல் மைய ஊழியர் கள் , மீடியா சான்றிதழ் குழு , கண்காணிப்பு குழு , பறக்கு படை குழு , நிலை யான கண்காணிப்பு குழு , செலவின கண்காணப்பு குழு உள்ளிட்ட குழுக்க ளில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு ₹ 1200 , 1000 மற்றும் கடைநிலை ஊழியர் களுக்கு 7200 ம் வழங்கப்படுகிறது. நுண்ணறிவு பார்வை யாளர்களுக்கு ( 1000 ம் , உதவி தேர்தல் செலவின பார்வையாளர்களளுக்கு 17.500 ம் வழங்கப்படுகிறது. இதுதவிர தேர்தல் பணிக் காக பயிற்சிக்கு செல்லும் போதும் 4 நாட்களும் , தேர் தலின் வாக்குப்பதிவுக்கு வாக்குச்சாவடிக்கு செல் லும் போது 2 நாடகளும் தேர்தல் பணி செய்த நாட் களுக்கும் ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இவ்வாறு அதிகாரிகள் கூறினர்

No comments:

Post a comment