50 சதவீத அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிபுரிய வலியுறுத்தல் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

50 சதவீத அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிபுரிய வலியுறுத்தல்

 


'அனைத்து துறை அரசு பணியாளர்களும், 50 சதவீதம் சுழற்சி முறையில் பணியாற்ற உத்தரவிட வேண்டும்' என, அரசுக்கு, அரசு பணியாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.


தமிழக அரசின் தலைமை செயலருக்கு, தமிழ்நாடு தலைமை செயலக சங்க முன்னாள் செயலர் வெங்கடேசன் அனுப்பியுள்ள மனு:கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, வெகு தீவிரமாக பரவி வருகிறது. தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நோய் பரவல் தினமும் அதிகரித்து வருகிறது.தலைமை செயலகம்மற்றும் அமைச்சு பணி தலைமை அலுவலகங்களில் பணிபுரிவோரில் பெரும்பாலானோர், சென்னையின் அண்டை மாவட்டங்களில் வசிக்கின்றனர்.அவர்கள், மின்சார ரயில்களை நம்பி உள்ளனர்.அலுவலக நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களில், கூட்ட நெரிசல் எப்போதும் போல அதிகம் உள்ளது. 


மாநகர பஸ்களிலும், இதே நிலை தான். சென்னை மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும், அரசு ஊழியர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியே, அலுவலகம் வந்து செல்கின்றனர்.தற்போது, நுாற்றுக்கும் மேலான தலைமை செயலக பணியாளர்கள், 1,000த்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.பல துறைகளின் தலைவர் அலுவலகங்களில், இட நெருக்கடி உள்ளது. 


இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.கடந்த ஆண்டு, கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழக அரசு, 50 சதவீத பணியாளர்களை, சுழற்சி முறையில் பணியாற்ற ஆணையிட்டது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, மிகத் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதால், இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தலைமை செயலகம் உள்ளிட்ட, அனைத்து துறை ஊழியர்களை, 50 சதவீதம் என, சுழற்சி முறையில்பணியாற்ற, தமிழக அரசு ஆணையிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment