12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத் துறை இயக்குனர் சுற்றறிக்கை - ஆசிரியர் மலர்

Latest

04/04/2021

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத் துறை இயக்குனர் சுற்றறிக்கை

 640403


 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத் துறை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.


விடைத் தாள்கள் குறித்து வெளியான அறிவிப்பு  முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை  கொரோனா பரவல் காரணமாக 9 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சியடைவதாக தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் பனிரெண்டாம் வகுப்புக்கு திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.


தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில் பனிரெண்டாம் வகுப்புக்கும் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் தேர்வு ரத்தாவதற்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளுக்கான பணிகள் ஒரு பக்கம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.


அதில், “பிளஸ் 2 பொதுத் தேர்வு, மே 3ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை, மாவட்ட கல்வி அலுவலர்கள் விரைந்து கவனிக்க வேண்டும். தேர்வுக்கான விடை எழுதும் முதன்மை தாள்கள் மற்றும் மாணவர்களின் தகவல் இடம் பெறும் முகப்பு சீட்டை ஒன்றாக இணைக்க வேண்டும்.


மொழிப் பாடங்களுக்கு, 30 பக்கங்களுக்கு புள்ளியிடப்பட்ட, கோடிட்ட வெற்று தாள்கள் வழங்கப்படும். கூடுதல் விடைத்தாள்களும் அதேபோல் வழங்கப்படும். உயிரியலுக்கு, தாவரவியல், விலங்கியல் என, தனித்தனி முதன்மை தாள்கள், ஒரே முகப்பு தாளுடன் வழங்கப்படும். கணக்கு பதிவியலுக்கு, கட்டங்கள் உள்ள விடைத்தாள்கள் தரப்படும்.


வரலாறு தேர்வுக்கு இந்திய வரைபடம் மற்றும் உலக வெளிப்புற வரைபடத் தாள் இணைக்கப்படும். புவியியலுக்கு ஒரு வெளிப்புற வரைபடத் தாள் தரப்படும். வணிக கணிதம் மற்றும் புள்ளியியலுக்கு, வரை கட்ட தாள் தரப்படும்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459