பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் கட் - ஆசிரியர் மலர்

Latest

06/03/2021

பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் கட்

 %25282%2529


பணி நிரந்தரம் கேட்டு, ஒரு வாரமாக சென்னையில் போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஒரு வார சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளது. 


தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.வாரத்தில் இரண்டு நாட்கள் ஏற்கனவே பணி வழங்கப்பட்ட நிலையில், பணி நாட்களை மூன்று அரை நாட்களாக உயர்த்தி, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.


அதேபோல, பகுதி நேர ஆசிரியர்களின் மாத ஊதியம், 7,700 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிப்ரவரியில் இருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.இதில் திருப்தியடையாத பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் கேட்டு, சென்னைக்கு வந்து, டி.பி.ஐ., வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.கடந்த மாதம், 2ம் தேதி முதல், 12ம் தேதி வரை இந்த போராட்டம் நடந்தது. 


இந்த போராட்ட நாட்களுக்கு, சம்பளத்தை பிடிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு வாரம் நடந்த போராட்ட நாட்களுக்கு, சம்பள பிடித்தம் செய்ய, கருவூலத்துறைக்கு, பள்ளிக் கல்வித் துறை கடிதம் எழுதியது.இந்த கடிதத்தின்படி, எட்டு நாட்கள் சம்பள பிடித்தம் செய்து, அந்த நிதியை மாவட்ட திட்ட அலுவலக வங்கி கணக்கில் செலுத்த, தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459