தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
தமிழகத்தில் கொரோனா தொற்று மிகவும் சிறப்பான வகையில் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 500-க்கு கீழ் பதிவானது. இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களாக தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் அதிகரித்துள்ளது.
கடந்த 10 நாட்களாக 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
இதனால் தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது முகக்கவசம் அணியவில்லை அபராதம் விதிக்கலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீதும் அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment