கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் 8 ஆசிரியர்கள் மற்றும் 19 பொதுமக்களுக்கு கொரோனா பாதிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

31/03/2021

கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் 8 ஆசிரியர்கள் மற்றும் 19 பொதுமக்களுக்கு கொரோனா பாதிப்பு

 .


தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரவி வருவதாகவும் செய்தி வெளீயானது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு அதிரடியாக விடுமுறை அளிக்கப்பட்டது 

 

தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதிகளில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது கும்பகோணத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  

 

அதில் கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் பணிபுரிந்து வரும் 8 ஆசிரியர்களுக்கும் மற்றும் 19 பொதுமக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


No comments:

Post a Comment