நாடுமுழுவதும் மீண்டும் பரவும் கொரோனா: மாநில முதல்வர்களுடன் 17ல் மோடி ஆலோசனை - மீண்டும் ஊரடங்கு? - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நாடுமுழுவதும் மீண்டும் பரவும் கொரோனா: மாநில முதல்வர்களுடன் 17ல் மோடி ஆலோசனை - மீண்டும் ஊரடங்கு?

.


டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி புதன்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியாவில் இதுவரை 1,14,04,279 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,10,18,816 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1,58,836 பேர் உயிரிழந்துள்ளனர். 226,627 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கும்படி மக்களுக்கு மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது. கடந்த டிசம்பர் 2ம் வாரத்தில் இருந்து இதுவரை கொரோனா பாதிப்பு விகிதம் 33% அதிகரித்துள்ளது. குறிப்பாக நாட்டின் மொத்த வைரஸ் பாதிப்பில் 85 சதவீதம் மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா உள்பட 8 மாநிலங்களில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.கொரோனா அதிகரிப்பு காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மார்ச் 15 இன்று முதல் 21ம் தேதி வரை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வரும் 17ஆம் தேதி புதன்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார். நாட்டில் கடந்த 5 மாநிலங்களில் கொரோனா வைரஸ் 5 மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகராஷ்டிராவில் தினசரியும் 63 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் கேரளாவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அடடே.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. கடன் வேற வாங்கியிருக்கிறார் கடந்த ஜனவரி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருவதால் பிரதமர் மோடி மீண்டும் மாநில முதல்வர்களுடன் 17ஆம் தேதி புதன்கிழமையன்று ஆலோசனை நடத்த உள்ளார்.கொரோனா பரவலை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இருப்பினும், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய அரசு மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்களும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.'! (?)

No comments:

Post a Comment