யுபிஎஸ்சி தேர்வு எழுதாமல் தவறவிட்டவர்களுக்கு வாய்ப்பு! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

யுபிஎஸ்சி தேர்வு எழுதாமல் தவறவிட்டவர்களுக்கு வாய்ப்பு!

 


கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு கடைசி வாய்ப்பில் யுபிஎஸ்சி தேர்வை எழுதாமல் தவறவிட்டவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யுபிஎஸ்சி நடத்திய தேர்வை எழுத முடியாதவர்கள், கூடுதலாக ஒரு வாய்ப்பு வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதை ஏற்று கூடுதலாக ஒரு வாய்ப்பை வழங்க நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர். இந்த வழக்கு மீண்டும் நேற்று (பிப்ரவரி 5) விசாரணைக்கு வந்தபோது, தேர்வை எழுத முடியாத தேர்வர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a comment