வெற்றி நடை போடும் தமிழகம் - தமிழக அரசின் 8 ஆண்டு கடனுக்கான வட்டி ரூ.1,89,872 கோடி! - ஆசிரியர் மலர்

Latest

13/02/2021

வெற்றி நடை போடும் தமிழகம் - தமிழக அரசின் 8 ஆண்டு கடனுக்கான வட்டி ரூ.1,89,872 கோடி!

 


மதுரை: தமிழக அரசு கடைசி 8 ஆண்டில் வாங்கிய பல்வேறு வகை கடன்களுக்கான வட்டி தொகை மட்டும் ரூ.1,89,872.18 கோடி. இதில் ரூ.1,65,814.52 கோடியை மாநில அரசு செலுத்தி இருக்கிறது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் வரவு, செலவு விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மத்திய தலைமை நிதி தணிக்கைக்குழு வெளியிட்டுள்ளது. 

இதில் மாநிலங்கள் வாங்கிய அனைத்து வகை கடன்களுக்கான வட்டி விகிதமும் இடம்பெற்றுள்ளது. 

அதில் கடைசி 8 ஆண்டில் தமிழகம் வாங்கிய பல்வேறு வகைகடன்களுக்கான வட்டி தொகை மட்டும் ரூ.1,89,872.18 கோடி என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுவரை ரூ.1,65,814.52 கோடியை மாநில அரசு செலுத்தியுள்ளது. 

நிலுவைத் தொகையை மார்ச் மாதத்திற்குள் கொடுத்தாக வேண்டும். 

எட்டு ஆண்டில் தமிழக அரசு பெற்ற கடன்களுக்கான வட்டி விவரம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இது குறித்து மதுரை மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனர் ஹக்கீம் கூறுகையில், 

'கடைசி 8 ஆண்டுகளில் செலுத்தப்பட்ட வட்டி மட்டுமே ரூ.1.65 லட்சம் கோடி என்றால், கடன் எவ்வளவாக இருக்கும் என்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை. 

அரசு செலுத்திய வட்டி தொகையை மட்டும் பயன்படுத்தினால், பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்ட ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.73,972 வீதம் வழங்கிட முடியும்.

இந்த நிதியாண்டுக்கான வட்டியும் சரியாக செலுத்தப்படவில்லை. 

இன்னும் இரு மாதங்களே இருக்கும் நிலையில் ரூ.20,146.77 கோடி செலுத்தப்பட வேண்டும். 

கடன் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். 

அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்' என்றார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459