75 வயதுக்கு மேற்பட்டோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

75 வயதுக்கு மேற்பட்டோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு!

.

 

ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாயை மட்டும் நம்பியிருக்கும், 75 வயதுக்கு மேற்பட்டோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது; அவர்களின் வட்டி வருவாய், வரிக்கு உட்பட்டதாக இருந்தால், அதை வங்கியே பிடித்தம் செய்து விடும்.


* சிறிய அளவில் வரி செலுத்துவோரின் வருமான வரி தொடர்பான குறைகளை தீர்க்க, வெளிப்படையான செயல்பாடுகளை உடைய குழு அமைக்கப்படும். 50 லட்சம் ரூபாய் வரை வரி விதிப்பிற்கு உட்பட்ட வருவாய் ஈட்டுவோரும், 10 லட்சம் ரூபாய் வரையிலான வரி பிரச்னைகளுக்கும், இக்குழுவில் முறையிட்டு விரைந்து தீர்வு காணலாம்.


* ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கு தொடர்பாக, மறு ஆய்வு செய்யும் காலம், ஆறு ஆண்டுகளில் இருந்து, மூன்று ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட வருமான வரி கணக்கு விபரங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. அதேசமயம், 50 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட வரி மோசடி தொடர்பாக, ஒருவரின் வருமான வரி கணக்கை மீண்டும் ஆய்வு செய்வதற்கான கால வரம்பு, மாற்றமின்றி, 10 ஆண்டுகளாக நீடிக்கும். 


* வெளிநாடு வாழ் இந்தியரின், தணிக்கைக்கு உட்பட்ட வருவாய் வரம்பு, 5 கோடியில் இருந்து, 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 


* வருமான வரி கணக்கு படிவத்தை பூர்த்தி செய்யும் போது, வங்கி, அஞ்சலக சேமிப்பு ஆகியவற்றில் ஈட்டிய வட்டி வருவாய், பங்கு விற்ப னை மூலம் பெற்ற மூலதன ஆதாயம், 'டிவிடெண்டு' வருவாய் ஆகிய விபரங்கள், தன்னிச்சையாக பதிவாகும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.

No comments:

Post a comment