புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது 2021 - தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல் - ஆசிரியர் மலர்

Latest

07/02/2021

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது 2021 - தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல்



2020 ஜனவரி மாதம் 20-21 மற்றும் 27-28 ஆகிய நாட்களில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது ( மானக் ) மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான இணைய வழியிலான தேர்வுகள் மாநில அளவில் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றன. 2018-19இல் நிகழ்ந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கான தேர்வு 2021 ஜனவரி 20-21 ஆம் நாட்களிலும் , 2019-20இல் மாவட்ட அளவிலான போட்டி களில் வென்ற மாணவர்களுக்கான தேர்வு 2021 ஜனவரி 27-28 ஆம் நாட்களிலும் நடைபெற்றன . மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தேசிய புத்தாக்க மையத்தின் ( National ) Innovation Foundation ) ) அறிவியலறிஞர்களும் , தமிழகத்தின் கல்லூரிப் பேராசிரியர்களும் மாணவர்களது காட்சிப் பொருள்களை அவர்கள் அனுப்பியிருந்த காணொலி காட்சி , ஒளிப்படங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்தனர். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்கள் இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற 45 மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் ( National Level Exhibition and Project Competition ) கலந்துகொள்வர். தேசிய அளவிலான தேர்வு குறித்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். முன்னதாக , வெற்றிபெற்ற மாணவர்களின் காட்சிப்பொருள்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்களின் வழிகாட்டுதல் கூட்டம் ( Mentorship Program ) ஒன்று நடத்தப்படும். இந்த நிகழ்வில் தேசிய அளவிலான வல்லுநர்கள் வாய்ப்பளிக்கப்படும்.


 இந்நிகழ்வு குறித்த மாணவர்களுடன் நேரில் உரையாடுவதற்கு விவரங்களும் விரைவில் தெரிவிக்கப்படும் . வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் , அவர்களை வழிநடத்திய வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


Inspire Award 2021 - Selected Students List - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459