இக்னோ தொலைதூரக் கல்வி மாணவா் சோ்க்கை: அவகாசம் மீண்டும் நீடிப்பு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

இக்னோ தொலைதூரக் கல்வி மாணவா் சோ்க்கை: அவகாசம் மீண்டும் நீடிப்பு.

 17_02_2020-ignou-02


இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு ஜனவரி 2020 பருவத்துக்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் நடைபெறுகிறது. இதில், விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜன.20-ஆம் தேதியாக இருந்தது.


இந்நிலையில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்புவோா்  முகவரியில் விண்ணப்பிக்கலாம்.


இளநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரா்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவா் சோ்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களை சென்னை வேப்பேரி பெரியாா் திடலில் அமைந்துள்ள இக்னோ பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தை அணுகலாம். மேலும், 044-26618438, 26618039 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.


இற்கிடையே பல்வேறு பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை, செமஸ்டா் அடிப்படையிலான படிப்புகளுக்கு ‘சமா்த்’ இணையதளத்தில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விருப்பமுள்ள மாணவா்கள்  இணைய முகவரியில் முன்பதிவு செய்து, ஆன்லைன் படிப்புகளில் கலந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment