சட்ட பொது நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை .. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

சட்ட பொது நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை ..

 இளநிலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பு இல்லை. பன்னிரண்டாம் வகுப்பில் ஏதேனும் ஒரு குரூப் எடுத்து பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டவர், மாற்றுத்திறனாளிகள் என ஆர் ஐ, பி ஐ ஓ, ஓ சி ஐ பிரிவினர் குறைந்தது 45 சதவிகிதமும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் குறைந்தது 40 சதவிகிதமும் பெற்றிருக்க வேண்டும்.

முதுநிலை சட்ட பட்டப் படிப்பிற்கு, இளநிலை சட்டப் படிப்பான LLB அல்லது அதற்கு இணையான பட்டப் படிப்பில், பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டவர், மாற்றுத்திறனாளிகள், என் ஆர் ஐ, பி ஐ ஓ, ஓ சி ஐ பிரிவினர் குறைந்தது 50 சதவிகிதமும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் குறைந்தது 45 சதவிகிதமும் பெற்றிருக்க வேண்டும்.

நுழைவுத் தேர்வு பற்றி…

இளநிலை நுழைவுத் தேர்விற்கான இரண்டு மணிநேரத் தேர்வில், 150 சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான வினாக்கள் இருக்கும். சரியான விடைக்கு ஒரு மதிப்பெண் தரப்படும். தவறான விடைக்கு 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும். ஆங்கிலம், தற்கால நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு லீகல் ரீஸனிங் (Legal Reasoning), லாஜிக்கல் ரீஸனிங் (Logical Reasoning), குவான்டிடேட்டிவ் டெக்னிக் (Quantitative Technique) என்ற பிரிவுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

முதுநிலைப் படிப்பிற்கான இரண்டு மணி நேர தேர்வில் 120 சரியான விடையை தேர்வு செய்யும் முறையிலான வினாக்கள் இருக்கும். சரியான விடைக்கு ஒரு மதிப்பெண் தரப்படும். தவறான விடைக்கு 0.25மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

No comments:

Post a comment