கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் : ஆசிரியர் சங்கம் - ஆசிரியர் மலர்

Latest

04/01/2021

கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் : ஆசிரியர் சங்கம்

 


தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 5068 பேர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். கல்வித் துறையில் காலியாக உள்ள 50 ஆயிரம் அமைச்சுப் பணியாளர் இடங்களை நிரப்ப வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கவுன்சலிங்கில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது போல பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகளிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க  வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்து, கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11ம் தேதி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை சந்தித்து மனு வழங்கும் போராட்டம் நடத்தப்படும். அதற்கு பிறகு பிப்ரவரி 12ம் தேதியும் அதற்கு பிறகு சென்னையில் முதல்வரை சந்தித்து மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும்


மேலும் புதிய கல்வி செய்திகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459