ஜனவரி 9 ல் தர்ணா போராட்டம் : ஆசிரியர் சங்கம் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

04/01/2021

ஜனவரி 9 ல் தர்ணா போராட்டம் : ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

 


கோப்புப்படம்

தமிழகத்தில் ஆசிரியர் கல்வி பயின்று முடித்த பல்லாயிரக் கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை பறிக்கும் ஆசிரியர் பணி நியமன வயது வரம்பு குறைப்பை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஜனவரி 9ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் தர்ணா போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அதன் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் கூறினார்.உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற சங்கத்தின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாட்டின் எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களை சோதிக்கும் வகையில் தொடர்ச்சியாக மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கு எதிரான ஆணைகளைப் பிறப்பித்து வருகின்றன.
தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற சங்கத்தின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இதற்காக அமைக்கப் பட்ட குழு அரசுக்கு அறிக்கை அளித்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் நடவடிக்கை இல்லை.எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும், மத்திய அரசு கல்வி நிலையங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வந்ததை ரத்து செய்து தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு எதிரான நிலை எடுத்துள்ளது. இதனை திரும்பப் பெற்று அவர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்.ஜாக்டோ-ஜியோ போராட் டத்தின்போது 5,500 அரசு ஊழி
யர், ஆசிரியர்கள் மீது போடப் பட்ட 17.பி குற்றச்சாட்டு குறிப் பாணையை திரும்பப் பெற வேண்டும்.தொடர்ச்சியாக தமிழக அரசு ஆசிரியர்களுக்கு விரோதமான பல ஆணைகளை பிறப்பித்துள் ளது. இவற்றைத் திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2021 ஜனவரி 9ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் தர்ணா போராட்டமும், மார்ச் மாதத் தில் சென்னையில் 10 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.பள்ளிகள் திறப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கொரோனா காலத்தில் மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறக்கும் முன்பு சுகாதார மற்றும் மருத்துவ துறை வல்லுனர்களின் கருத்துக்களை கேட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் வகையில் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப் படுத்தப்பட்டு பள்ளிகளை திறக்க வேண்டும் என்றார்.தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆசிரியர்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ச.மயில் மேலும் கூறினார். மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459