சித்தா படிக்க 4,838 பேர் விண்ணப்பம். - ஆசிரியர் மலர்

Latest

03/01/2021

சித்தா படிக்க 4,838 பேர் விண்ணப்பம்.

 


சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கு, 2020 -- 21ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 4,838 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், ஐந்து அரசு கல்லுாரிகளில் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் ஆகிய படிப்புகளுக்கு, 330 இடங்கள் உள்ளன. இவற்றில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 50 இடங்கள் போக, 280 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் உள்ளன.தனியார் கல்லுாரிகளில், 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு; 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீடு; 65 சதவீத இடங்கள் மாநில அரசுக்கும் கிடைக்கின்றன.


இந்த படிப்புகளுக்கு, 2020 -- 21ம் கல்வியாண்டு முதல், 'நீட்' தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப வினியோகம், டிச., 13ல் துவங்கி, 31ல் முடிந்தது.இதில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 3,492 பேர்; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 1,346 பேர் என, மொத்தம், 4,838 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பின், தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கை துவங்கும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459