மருத்துவ படிப்புக்கான 2 ஆம் கட்ட கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

01/01/2021

மருத்துவ படிப்புக்கான 2 ஆம் கட்ட கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு


 மருத்துவ படிப்புக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 12 இடங்கள் காலியாக இருக்கின்றன. 

 

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஜனவரி 4ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

 

2020 நவம்பர் 18-ந் தேதி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதலில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றது. பின்னர், பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நவம்பர் 23-ஆம் தேதி தொடங்கியது. டிசம்பர் 10 ஆம் தேதி முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது. 

 

இந்நிலையில், தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஜனவரி 4ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வருகிற 4-ஆம் தேதி கலந்தாய்வு நடக்கிறது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 12 இடங்கள் காலியாக இருக்கின்றன. 

 

இதனைத் தொடர்ந்து, ஜனவரி 5ஆம் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 2 ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடைபெற இருக்கின்றது. 

Join Telegram :Click here


மேலும் புதிய கல்வி செய்திகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்

இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்

No comments:

Post a Comment