இலவச UPSC பயிற்சி வகுப்பு : விண்ணப்பிக்க ஜனவரி 20 கடைசி - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

இலவச UPSC பயிற்சி வகுப்பு : விண்ணப்பிக்க ஜனவரி 20 கடைசிஉணவுப்படி, தங்குமிடம் ஆகியவற்றுடன் இலவசமாக வழங்கப்படும் யுபிஎஸ்சி பயிற்சியில் சேர விரும்புவோா், ஜன.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக இளைஞா் நலப் படிப்பியல் துறையால், தமிழக அரசு நிதியுதவியுடன் நடத்தப்படு ம் அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி அகாதெமியில், யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்ய ஜன.31-ஆம் தேதி தகுதித் தோ்வு நடத்தப்படவுள்ளது.

இதில் அதிக மதிப்பெண் பெற்ற 100 பேருக்கு, பிப்.15 முதல் ஜூன் 26-ஆம் தேதி வரை இலவச பயிற்சி வழங்கப்படுவதுடன், தங்குமிடம் மற்றும் உணவு ஊக்கத் தொகையாக ரூ.3000 வழங்கப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோா்,  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து, பயிற்சி இயக்குநா், அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி அகாதெமி, இளைஞா் நல படிப்பியல் துறை, மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், மதுரை 625021 என்ற முகவரிக்கு, ஜன.20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, 04522458231, 9865655180 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

புதிய வேலை வாய்ப்பு தகவலை பெற இங்கே கிளிக் செய்யவும்

Join Telegram : Click here

. இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படலாம்

1 comment: