SCOPE 2020 - One Day Training Schedule for Teachers. - ஆசிரியர் மலர்

Latest

05/12/2020

SCOPE 2020 - One Day Training Schedule for Teachers.

 


IMG_20201204_194616

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான திட்ட ஏற்பளிப்புக் குழுவின் நடவடிக்கைக் குறிப்பில் Quality Components என்ற தலைப்பின்கீழ் அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் Specific Concept Oriented Programme ( SCOPE ) என்ற திட்டத்தை ஒரு மாவட்டத்திற்கு 10 பள்ளிகள் வீதம் 32 மாவட்டங்களில் உள்ள 320 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இதன் முதற்கட்டமாக மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சியினை 08.12.2020 அன்று நடத்த வேண்டும்.


இத்திட்டத்தின் நோக்கம் :


* பாடத்திட்டத்தில் உள்ள கருப்பொருளை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் திறமையை அதிகரித்தல்.


* அனைத்து மாணவர்களும் தங்களது பாடக் கருப்பொருளை உணர்ந்து கற்றலை உறுதிப்படுத்துதல்.


*மாணவர்களின் அறிவாற்றலை Projects , Assignments and Field Visits மூலம் வலுவூட்டுதல். 


* 21 ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ப மாணவர்களிடம் சேர்ந்து கற்றல் , தலைமைப் பொறுப்பு , பங்கேற்றல் மற்றும் மேம்படுத்துதல்.


* பாடத்தில் உள்ள கருப்பொருளை அன்றாட வாழ்வில் தொடர்புபடுத்தி மாணவர்களின் அறிவுத் திறனை வளர்ச்சியடைய செய்தல்.


* பாடப்புத்தகத்திற்கு அப்பாற்பட்டு , புதிய சிந்தனை மற்றும் புதிய உத்திகளை பயன்படுத்தி ஆர்வத்தை தூண்டுதல் மற்றும் வளர்த்தல்  ஆகும்.



SCOPE 2020 - One Day Training Schedule Program - SPD Proceedings - Download here...


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459