வேலைவாய்ப்புப் பயிற்சியுடன் இணைந்த பட்டப் படிப்புகளை ஊக்கப்படுத்துங்கள்: அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

வேலைவாய்ப்புப் பயிற்சியுடன் இணைந்த பட்டப் படிப்புகளை ஊக்கப்படுத்துங்கள்: அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு.

 


மாணவர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சியுடன் இணைந்த பட்டப் படிப்புகளை ஊக்கப்படுத்துங்கள் என்று அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் யுஜிசி கடிதம் அனுப்பியுள்ளது.


அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''தொழில்துறையினரின் தேவைக்கு ஏற்ப, வேலைக்கான முன்பயிற்சிகளைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்புக்கும் வேலை கிடைப்பதற்கான திறனுக்கும் உள்ள இடைவெளி நீக்கப்படும். பொதுவான பட்டப் படிப்புக்கான பாடத்திட்டங்களுக்கும் நிறுவனங்களின் தேவைக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்த வேண்டும். இதற்கு பட்டப் படிப்புகளுக்கான திட்டங்களில் திறம்பட மறுவடிவமைப்பை மேற்கொள்ள வேண்டும். தொழில் துறைக்கும் சேவைத் துறைக்கும் ஏற்ற வகையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

இதில் வேலைவாய்ப்பு சார் பயிற்சிகள் (Apprenticeship/ internship) முக்கியப் பங்கு வகிக்கின்றன. நிஜமான பணிச் சூழலில் பணியாற்ற உதவும் வகையில் கட்டமைக்கப்பட்ட பயிற்சி வடிவங்களே இவை''.

இவ்வாறு யுஜிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.

இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள 18 பக்க வழிகாட்டு நெறிமுறைகளைப் பார்க்க: இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a comment