பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆசிரியர்கள் மனு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆசிரியர்கள் மனு

 IMG_20201201_102604


ஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம் செய்யக்கோரி 30க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மனு விபரம்:கடந்த 2011-12ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி போன்ற பாடப்பிரிவுகளுக்காக 5000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டோம்.தற்போது 7,700 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளாக மே மாதத்தில் சம்பளம் வழங்கவில்லை. மேலும், போனஸ், பண்டிகை முன்பணம், மகப்பேறு, மருத்துவ விடுப்பு, வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ., விபத்து காப்பீடு ஆகிய எந்த சலுகைகளும் வழங்கவில்லை.குறைந்தளவு ஊதியத்தை வைத்து குடும்பத்தை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகிறோம். எனவே, பகுதி நேர ஆசிரியர்களை கருணையுடன் பரிசீலித்து ஊதிய உயர்வுடன், பணி நிரந்தரம் செய்ய பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a comment